Saturday 5th of December 2020 08:23:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னார் நானாட்டானில் மற்றொரு தொகுதி தொல்லியல் எச்சங்கள் மீட்பு!

மன்னார் நானாட்டானில் மற்றொரு தொகுதி தொல்லியல் எச்சங்கள் மீட்பு!


மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளங்கோட்டை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள புறண்டிவெளிக் கிராமத்தில் உள்ள புறண்டி வெளி குளக்கட்டுக்கு அருகாமையில் உள்ள மேட்டு நிலப்பகுதி விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு பணியில் ஈடுபட்ட போது புரதான பொருட்கள் சில கண்டு பிடிக்கப்பட்டு நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.சிறீஸ்கந்தகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாய நடவடிக்கைக்காக துப்பரவுப்பணியில் ஈடுபட்ட விவசாயிகள் 2 கத்தி வடிவிலான வெட்டும் உபகரணத்தையும், உயிர்ச் சுவடி கவாட்டி கடல் வாழ் உயிரினம் சிற்பி வடிவிலானது மற்றும் உலோகத்துண்டுகள், மட்பாண்ட எச்சங்கள் என்பன காணப்பட்டுள்ளதையடுத்து பிரதானமாகக் காணப்பட்ட நான்கு பொருட்களையும் மீட்டு குறித்த தினத்தில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் எம். சிறிஸ்கந்தகுமாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த பொருட்கள் தொடர்பாக மன்னார் தொல்பொருள் தினைக்களத்திற்கு பிரதேசச் செயலாளரினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த திணைக்களத்தினர் திங்கட்கிழமை மாலை நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் குறித்த பொருட்களை பார்வையிட்டுள்ளதுடன் அதை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மற்றும் குறித்த பொருட்கள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதே வேளை நானாட்டான் பிரதேச பகுதியில் கடந்த மாதம் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நாணயங்கள் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE