Friday 19th of April 2024 09:53:56 AM GMT

LANGUAGE - TAMIL
-
நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் முன்மாதிரியான செயற்பாடு!

நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் முன்மாதிரியான செயற்பாடு!


தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று நிலையினை தடுக்கும் முகமாக வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினால் அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக தனித்தனியாக சுற்றறிக்கைகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

ஆலயங்களில் பூசை வழிபாடுகளின் போதுபின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கைக்கு அமைய வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் கலந்து கொள்ளும் அடியவர்கள் தமது பதிவுகளை மேற்கொண்டு முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியே ஆலயத்திற்குள் சென்று பூசை வழிபாடுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆலயத்தின் வெளி வீதியிலிருந்து ஆலயத்துக்குள் நுழையும் அனைத்து பக்தர்களும் பதிவுகளை மேற்கொண்டு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒரே நேரத்தில் குறிப்பிட்டளவு எண்ணிக்கையான பக்தர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப் படுகின்றார்கள்.

நல்லூர் ஆலயத்தில் பின்பற்றப்படும் இறுக்கமான சுகாதார நடைமுறைகள் போல் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய ஆலயங்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதன் மூலம் யாழில் கொரோனா தொற்று ஏற்படாத சூழ்நிலையினை தொடர்ச்சியாகபேண முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், நல்லூர்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE