Wednesday 17th of April 2024 11:40:30 PM GMT

LANGUAGE - TAMIL
.
8 நாடுகளில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளர்கள்!

8 நாடுகளில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளர்கள்!


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றுவரை 4 கோடியே 25 இலட்சத்து 25 ஆயிரத்து 834-ஆகப் பதிவாகியுள்ளதாக ஜோன் ஹப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.

ஜோன் ஹப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகளின் பிரகாரம் இதுவரை 8 நாடுகளில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு நாடுகள் 10 இலட்சம் தொற்று நோயாளர்கள் என்ற இலக்கை நெருங்கி வருகின்றன.

உலகம் முழுவதும் அதிக தொற்று நோயாளர்களைக் கொண்ட முதல் 10 நாடுகளும் அவற்றின் தொற்று நோயாளர் தொகையும் வருமாறு,

அமெரிக்கா - 8,571,711, இந்தியா - 7,814,682, பிரேசில் - 5,380,635, ரஷ்யா -1,487,260, பிரான்ஸ் - 1,084,659, ஆர்ஜன்டினா - 1,081,336, ஸ்பெயின் -1,046,132, கொலம்பியா - 1,007,711, பெரு - 883,116, மெக்ஸிக்கோ - 880,775.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு, இந்தியா, அமெரிக்கா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE