Saturday 5th of December 2020 08:15:03 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொழும்பு கோட்டையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் நிறுத்தம்!

கொழும்பு கோட்டையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் நிறுத்தம்!


கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக கொழும்பு கோட்டை உள்ளிட்ட சில இடங்களில் இன்று மாலை 6.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் நிலையில் வெளி மாவட்டங்களுக்கான போருந்து சேவைககள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஒக்-25) மாலை முதல் கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர பேருந்துச் சேவைகளை நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்து சபையின் செயலாளர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இது தொடர்பில் நாளை மீண்டும் ஆலோசணைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பின் கோட்டை, புறக்கோட்டை (பெற்றா), பொறள்ள, வெலிக்கட ஆகிய பகுதிகளுக்கே குறித்த சமூக முடக்கல் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE