Friday 19th of April 2024 01:36:25 PM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னாரில் 11 பேருக்கு கொரோனா! வழித்தடம் அறிவித்தார் பணிப்பாளர்!

மன்னாரில் 11 பேருக்கு கொரோனா! வழித்தடம் அறிவித்தார் பணிப்பாளர்!


மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இன்று வரை 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை இடம் பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மினுவாங்கொடை கொரோனா கொத்தணி ஆரம்பித்த பின்னர் மன்னார் பட்டித்தோட்டம் பகுதியிலும்,பேலியகொட மீன் தொகுதி கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய இருவர் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய தினங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடையாளம் காணப்பட்ட 2 கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில் இருந்து மன்னாரிற்கு வந்த போக்கு வரத்து விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதனடிப்படையில் கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.20 மணியளவில் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த (ரத்னா ரவல்ஸ்) என்ற தனியார் பேருந்தில் வருகை தந்து 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னார் பேருந்து நிலையத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி இலங்கை அரச பேருந்தில் பயணத்தை மேற்கொண்ட பயணிகள்.

அதேபோல 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்தான எச்.எஸ்.ரவல்ஸ் ஊடாக பயணித்த மக்களும் உடனடியாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்பு கொள்ளவும்.

குறித்த பேருந்துகளில் பயணித்த மக்கள் உடனடியாக 071-8474361 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தமது இருப்பிடத்தை தெரியப்படுத்திக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இன்று வரை 995 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த 11 நபர்களும் கொரோனா தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட 11 பேரில் 2 பேர் சிகிச்சையின் பின்னர் இரனவல வைத்தியசாலையில் இருந்து தமது வீடுகளக்கு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE