Tuesday 19th of March 2024 02:26:32 AM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியா – சீனா  இணைந்து செயற்பட வேண்டும்; மைக் பம்பியோ!

சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியா – சீனா இணைந்து செயற்பட வேண்டும்; மைக் பம்பியோ!


பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு சீனாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பம்பியோ இன்று டெல்லியில் வைத்துத் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை இந்திய தலைவர்களுடன் டெல்லியில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்னதாகக் கருத்து வெளியிடும்போதே அவா் இவ்வாறு கூறினார்.

இந்திய – சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலையடுத்து ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பம்பியோ புதுடெல்லிக்கு வந்துள்ளார். அவருடன் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளார்.

"எங்களைப் போன்ற இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இன்னும் அதிகமாக நெருக்கமாக இணைந்து செயற்படவும் வளர்ச்சியடையவும் தற்போது புதிய வாய்ப்பு" உருவாகியுள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடனான பேச்சுவார்த்தைக்கு முன்னர் பம்பியோ கூறினார்.

நிச்சயமாக இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. இன்று விவாதிக்க நிறைய வி்டயங்கள் உள்ளன.

வுஹானில் தோன்றிய தொற்றுநோயை எதிர்கொள்வதில் எங்கள் ஒத்துழைப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல், பிராந்தியமெங்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து நாங்கள் விவாதிக்கவுள்ளோம் எனவும் பம்பியோ கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேல்தல் நவம்பர் 3-ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தோ்தல் பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருளாக சீனா மீனாத விமர்சனங்களை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிறுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆசியாவில் வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள இந்தப் பிராந்தியத்தில் உள்ள தனது நட்பு நாடுகளுகளுடன் நெருக்கமான உறவுகளை மேம்படுத்த பம்பியோ முயன்று வருகிறார்.

மிகவும் பலம்வாய்ந்த நாடான சீனாவுடன் இந்தியாவுக்கு பல்வேறு சொந்தப் பிரச்சினைகள் உள்ளன.

கடந்த ஜூன் மாதத்தில் சீனப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இது சீனாவிற்கு எதிரான இந்தியாவில் மனநிலையை மேலும் கடுமையாக்கியுள்ளது. அத்துடன் அமெரிக்காவுடன் நெருக்கமான இராணுவ உறவுகளைப் பேண பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் தூண்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் கடற்படை பயிற்சிகளில் இணைந்துகொள்ளுமாறு அவுஸ்திரேலியாவுக்கும் இந்த மாதம் இந்தியா அழைப்பு விடுத்தது. இது பிராந்தியத்தில் தனக்கு அச்சுறுத்தலானது என சீன கவலை கொண்டுள்ளது.

இந்நிலையில் ஆசியப் பிராந்தியத்தில் நட்பு நாடுகளிடையே ஒத்துழைப்புக்களை மேம்படுத்தி சீனாவின் சவால்களை சமாளிப்பதில் எங்கள் கவனம் இருக்க வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்தார்.

இந்தியாவும் – அமெரிக்காவும் இன்று இரு தரப்பு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன.

ஏவுகணைகள் மற்றும் மற்றும் நவீன ரக சிறிய ஆளில்லா விமானங்களை வழங்குதல் மற்றும் அமெரிக்காவின் செயற்கைக்கோள் மற்றும் வரைபடத் தரவை இந்தியா அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குதல் போன்ற ஒப்பந்தங்கள் இதில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE