Tuesday 16th of April 2024 12:58:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி மாவட்டத்தில் 282 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 282 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!


கிளிநொச்சி மாவட்டத்தில் 282 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு யெலணியின் விசேட கூட்டத்தினை தொடர்ந்து ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் சுகாதார துறையினர், பாதுகாப்பு தரப்பினர், பொலிசார், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்டத்தில் தற்போது காணப்படும் நிலை தொடர்பில் ஆராயப்பட்டதுடன், பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்படவேண்டிய அவசரமான விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார். குறித்த சந்திப்பில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தற்போது நிலவிவருகின்ற கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை எனப்படுகின்ற இன்றைய நிலை தொடர்பாக மாவட்ட மட்டத்திலே இன்று மீளாய்வு ஒன்றினை நாம் மேற்கொண்டிருந்தோம். எமதுமாவட்டத்தில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலை தொடர்பாகவும் மற்றும் இந்த பாதிப்பிலிருந்த மக்களை பாதுகாத்துக்கொள்வதன் ஊடாக அனைவரும் பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் இன்று நாம் ஆராய்ந்தோம்.

அந்த வகையில் சுகாதார திணைக்களத்தின் ஊடாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்பான விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் எமது மாவட்டத்தில் 282 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

அதைவிட மாவட்டத்தில் இருக்கக்கூடியதான சன நெருக்கமான இடங்கள், ஆபத்தான இடங்கள் எனக்கூறக்கூடிய இடங்களிலே எவ்வாறு சுகாதார முறைகளை பேணுவது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அந்த வகையில் பொதுச்சந்தையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை திணைக்களங்கள் ரீதியாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்ற போதிpலும் மக்கள் சமூக பொறுப்பினை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமாக இருக்கின்றது. முன்னைய காலம் போல் அல்லாது தற்புாது தொற்று அதிகமாக காணப்படுவதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

எந்த வேளையிலும் சுகாதார துறையினரால் குறிப்பிடப்பட்டுள்ள 3 விடயங்களையும் கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அந்த வகையில் மக்கள் பொதுவாக இந்த விடயங்களில் அக்கறை செலுத்த வேண்டும். அதாவது, பொது இடங்களிற்கு செல்லகின்றபோது முக கவசங்களை அணிந்து செல்லல், கைகளை கழுவுதல் மற்றம் சமூக இடைவெளிகளை எவ்வேளையிலும் பேண வேண்டும் என்ற விடயத்தினை நாங்கள் குறிப்பிட்டிருக்கின்றோம்.

வங்கிகளில் குறிப்பாக பண அட்டைகளின் ஊடாக இயந்திரங்களில் பணம் எடுக்க செல்கின்ற போது கைகளை கழுவுகின்ற செயற்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கூறுகின்றோம்

இதேவேளை மக்கள் அதிகமாக கூடும் செயற்பாடுகளை தவிர்க்குமாறும் இன்று கலந்துரையாடப்பட்டது. அந்த வகையில், ஆலயங்களில் அதிகளவான மக்கள் கூடுவதை தவிர்க்கவும், வீடுகளில் மக்களை கூட்டுகின்ற செயற்பாடுகள் குறிப்பாக திருமண பிறந்தநாள் நிகழ்வுகள் போன்றவற்றில் கூடுவதை தவிர்த்துக்கொள்ளுதல் நன்று அவ்வாறில்லையேல் குறைந்த அளவு மக்கள் டமாடக்கூடிய வகையில் முன்னெடுக்குமாறும் மக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

.இதேவேளை அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் சம நேரத்தில் நாங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். அந்த வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பில் சுகாதார தரப்பினர் அவதானம் செலுத்தி வருகின்றனர். அதேபோன்று வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE