Wednesday 2nd of December 2020 03:31:45 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனாவின் பிடிக்குள் இலங்கை: உலகத் தரவரிசையில் 112வது இடத்திற்கு முன்னேறியது!

கொரோனாவின் பிடிக்குள் இலங்கை: உலகத் தரவரிசையில் 112வது இடத்திற்கு முன்னேறியது!


கொரோனாவின் பிடிக்குள் சிக்கியுள்ள நிலையில் தினமும் அதிகளவானா தொற்றார்கள் இனம் காணப்பட்டு வருவதை அடுத்து உலகளாவிய கொரோனா தொற்று உறுதியான நாடுகள் வரிசையில் சடுதியான முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது இலங்கை.

நேற்று முன்தினம் 547 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதன் அடிப்படையில் மூன்று இடங்கள் முன்னேறி 114வது இடத்தில் இருந்தது இலங்கை.

இந்நிலையில் நேற்றைய தினம் 335 புதிய தொற்றாளர்கள் இனம்காணப்பட்டிருந்தனர். இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் உலகளாவிய கொரோனா தொற்று உறுதியான நாடுகள் வரிசையில் மேலும் 2 இடங்கள் முன்னேறி 112வது இடத்தில் உள்ளது இலங்கை.

இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 335 பேரில் 308 பேர் பேலியகொட மற்றும் மினுவங்கொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தலில் இருந்த 27 பேருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொரோனா தொற்று உறுதியானவர்களில் நேற்றைய தினம் 32 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து இதுவரை குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 75 ஆக உயர்வடைந்துள்ளது.

இதையடுத்து கொரோனா தொற்று உறுதியான நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 111 ஆக உள்ளதுடன், நேற்று முன்தினம் மட்டும் அடுத்தடுத்து மூவர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE