Tuesday 19th of March 2024 05:00:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டு. வக்கல பொலீசார் பொய்யான வழக்குகளைபதிவதாக குற்றச்சாட்டு!

மட்டு. வக்கல பொலீசார் பொய்யான வழக்குகளைபதிவதாக குற்றச்சாட்டு!


மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை காணிகளாக பயன் படுத்தி வந்த இடங்களில் தங்களது மாடுகளை மேய்ப்பதற்கு தடையாக மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள வக்கல பொலீசார் பொய்யான வழக்குகளை போடுவதாக பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திபுலான மேய்ச்சல் தரை பகுதிகளுக்கு நேரடியாக சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை சந்தித்து கலந்துரையாடிய பண்ணையாளர்கள் மேற்படி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

பரம்பரை பரம்பரையாக மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள திபுலானை பகுதிக்கு மாடுகளை மேய்ப்பதற்காக கொண்டு சென்று வருகிறோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போக நெற்செய்கை செய்யப்படும் காலத்தில் மூன்று மாத காலத்திற்கு மட்டுமே நாம் எமது மாடுகளை மேய்ப்பதற்கு அம்பாறை திம்புலான பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு மாடுகளை கொண்டு சென்று மேய்ப்பது வழமை.

ஆனால் தற்போது வந்த புதிய ஆட்சியில் மீண்டும் இந்த பகுதிகளுக்கு மாடுகளை கொண்டு வரக் கூடாது என இந்த பகுதியில் உள்ள பொலீசார், வனவளப் பாதுகாப்பு அதிகாரிகள் எங்களை அச்சுறுத்தி வழக்கு தாக்கல் செய்து வருகின்றனர்.

இன்று வரை இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகளை தாக்குதல் செய்துள்ளனர். இதில் எங்கள் மீது பல பொய்யான வழக்குகளை போடுகிறார்கள் வடிசாராயம் காய்ச்சிய வழக்குகளை கூட எம் மீது போடுகிறார்கள். ஒரு வழக்கிற்கு 20,000 ரூபாய் தண்டப் பணம் விதிக்கின்றனர். பண்ணையாளர்கள் தங்களது பண்ணையாளர் அடையாள அட்டையை காட்டியும் அதனை தூக்கி எறிந்து கைது செய்கின்றனர்.

சிலர் எங்களது மாடுகளை கட்டிவைத்து அளவுக்கு அதிகமாக பணத்தை கோருகின்றனர். இதனால் எமது பண்ணையாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மயிலத்த மடு மாதவனை பகுதிகளில் சிங்கள மக்களுக்கு சோளம் பயிர் செய்கை செய்ய அந்த பகுதி பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்தே இந்த பகுதியில் தங்களது மாடுகளை மேய்ப்பதற்கு சிங்கள அரச அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினைகளை கேட்டறிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன். நேரடியாக அப்பகுதிக்கு பொறுப்பான வக்கல பொலீஸ் பொறுப்பதிகாரி அவர்களை சந்தித்து கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை கூட்டி மட்டக்களப்பு அம்பாறை அதிகாரிகள் மட்டத்தில் ஒரு முடிவு வரும் வரை பண்ணையாளர்கள் மீது வழக்கு போடும் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE