Friday 19th of April 2024 09:11:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
விமானப்படையின் தளபதி ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு! புதிய தளபதி நியமனம்!

விமானப்படையின் தளபதி ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு! புதிய தளபதி நியமனம்!


எதிர்வரும் 02ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் நேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை சந்தித்திருந்த நிலையில் இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படையின் 18 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நவரம்பர மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரண கண்டி, தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். பாகிஸ்தான் விமானப்படையில் விமானி பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று விமானிகளில் ஒருவரான இவர், பாகிஸ்தான் விமானப்படையினால் சிறந்த கேடட் அதிகாரியாகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். 1987 ஆம் ஆண்டு ஜனவரி 02 ம் திகதி பொதுச் சேவைப் பிரிவில் விமானியாக கடமையில் இணைந்துள்ளார்.

சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தில் 03 ம் படைப்பிரிவில் கண்காணிப்பு விமானியாக கடமையில் இணைந்த சுதர்ஷன பத்திரண சீன ஆலோசகர்களின் கீழ் இல5 ஜெட் விமானம் F - 7 விமானப்பயிற்சி பெற்ற முதல் 06 பேரில் ஒருவராவார்.

அவர் N0 - 10 தாக்குதல் விமான படைப்பிரிவில் பயிற்ச்சி கட்டளை அதிகாரியாகவும் நடவடிக்கை கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார். 2002 தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை அதே படைப்பிரிவில் கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார். பின்னர் விமானப்படையின் பிரதான தாக்குதல் படைப்பிரிவில் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். 2000 ஆண்டு அவர் NO 5 - F - 5 படைப்பிரிவு மற்றும் எண் 10 (கஃபீர் ) படைப்பிரிவுகளின் கட்டளை அதிகாரியாகவும் NO 12 (மிக் -27 *) விமான தாக்குதல் படைப்பிரிவின் பதில் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். இலங்கை விமானப்படை விமானியாகவும் மேலும் சிவில் விமானபரிவில் பயிற்சியாளருக்கான அனுமதிப்பத்திரம் பெற்ற ஒருவராவார்.

எயார் வைஸ் மார்ஷல் பத்திரன ஒரு விமான பயிற்றுவிப்பாளார் ஆவர். மேலும் அவர் மிகை ஒலி விமானங்களான Kfir மற்றும் F7 போர் விமானங்கள் உட்பட 15 க்கும் மேற்பட்ட விமானங்களில் 3500 க்கும் மேற்பட்ட மணித்தியாலங்கள் விமானியாக பயணித்துள்ளார்.

அவர் பல்வேறு பறக்கும் செயற்பாடுகளின் ஈடுபட்டதன் காரணனமாக அவருக்கு 06 முறை வீரபதக்கம் பெற்றார்.அவர் இதுவரை விமானப்படை வரலாற்றிலே அதிக முறை கஃபீர் விமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவராவார்.

மேலும், அவர் ரஷியன் குடியரசு 2007 முதல் 2009 வரை அவர் இலங்கை தூதரகத்தின் முதல் பாதுகாப்பு பிரதிநிதி ஆவார். 2001 ம் ஆண்டு சீனவராய கல்வீடத்தில் பீடாதிபத்தியக்காவும் கட்டுநாயக்க விமானப்படை கட்டளை அதிகாரியாகவும் 2013ழும் 2016 ரத்மலான கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றினார்.

இந்நிலையில் எதிர்வரும் 02ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் அவர் விமானப்படைத் தளபதியாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 02ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் நேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை சந்தித்திருந்தார்.

எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் 36 வருட சேவையை எதிர்வரும் 02ஆம் திகதியுடன் நிறைவு செய்கிறார்.

இது குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஓய்வுபெற்றுச் செல்லும் விமானப் படை தளபதி என்னுடன் சந்திப்பு…

36 வருட சேவையை நிறைவுசெய்து நவம்பர் மாதம் 02ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் என்னை சந்தித்தார்.

2019 மே மாதம் 29 ஆம் திகதி விமானப் படை தளபதியாக நியமிக்கப்பட்ட சுமங்கள டயஸ் இலங்கையின் 17வது விமானப் படை தளபதியாகும்.

முப்பது வருட பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெரும் பங்காற்றிய அவர் தனது சேவைக் காலத்தில் வடமராட்சி நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி சேவா பதக்கம், தேசபுத்ர விருது, ரணசூர விருது (மூன்று முறை), வடக்கு கிழக்கு நடவடிக்கைகள் பதக்கம், உத்தம சேவா பதக்கம், விசிஷ்ட சேவா விபூஷணய உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றுள்ளார்.

தாய்நாட்டுக்காக செய்த பணிகளை பாராட்டிய நான் சுமங்கள டயஸ் அவர்களின் ஓய்வுகால வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்று தெரிவித்துள்ளார்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE