Thursday 25th of April 2024 04:49:04 AM GMT

LANGUAGE - TAMIL
.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிரான செயல்பாடுகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது! -சுரேஸ் பிரேமச்சந்திரன்!

இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிரான செயல்பாடுகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது! -சுரேஸ் பிரேமச்சந்திரன்!


7 கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயல்பாடுகளையும் இலங்கைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினை கருத்தில் கொண்டு, தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் சகல கட்சிகளும் ஒருமித்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவையென சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் விடையங்கள் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

இந்து பசுபிக் பிராந்தியத்தில் தனது இராணுவ மேலதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள சீனா எடுத்திருக்கும் முயற்சிகளும், சீனாவின் மையப்புள்ளியாக ஒரு முக்கியமான இடத்தில் இலங்கை இருப்பதனால், இலங்கையை பயன்படுத்துவதற்கு சீனா எடுக்கும் முயற்சிகளும், இவை வெறுமனே ஒரு பொருளாதார அடிப்படையில்தான் உறவுகள் இருக்கும் என்று கூறுவதும் கூட,

99 வருட குத்தகைக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்திருக்கின்ற அடிப்படையில் இலங்கையினுடைய நிலைப்பாடுகள் தொடர்பாக அமெரிகா, இந்தியா போன்ற நாடுகள் கவலை கொண்டிருக்கின்றார்கள்.

இது வெவ்வேறு பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் எனவும் அவர்கள் நம்புகின்றார்கள்.

அந்த வகையில் அமெரிக்கா யோசிக்கின்றது, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் இருக்கக்கூடிய இவ்வாறான நிலைகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என.

இந்த விடையத்தை வெளிப்படையாக இலங்கைக்கு வருகைதந் அமெரிக்கா இராஜாங்க செயலாளர்மைக் பொம்பியோ கூறியிருக்கின்றார்.

இதே போன்று இந்தியாவும் கூட இலங்கை எடுத்திருக்கும் இவ்வாறான நடவடிக்கைகளால், சீனா தொடர்பில் இலங்கை கொண்டிருக்கின்ற கருத்துருவாக்கங்கள், இலங்கை மண்ணை சீனாவினுடைய தேவைகளுக்கு இலங்கை அரசாங்கம் கொடுத்திருக்கின்ற நிலமை இந்தியாவிலும் ஒரு பாதுகாப்பு தொடர்பான கவலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் இவ்வாறான விடையங்களை செய்துகொண்டு போவதென்பது நிச்சயமாக இலங்கையினுடைய ஸ்திர தன்மைக்கு, இலங்கை பொருளாதாரத்தில் தன்னை வளர்த்துக்கொண்டு போக வேண்டுமானால் அரசியல் ஸ்திரதன்மை பேனப்பட வேண்டும்.

ஆனால் இலங்கை தானாக வலிந்து சில பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றது என நான் கருதுகின்றேன்.

இந்த நிலையில் நிச்சையமாக இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்கூட, அவர்களது நிலைப்பாடுகள், இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு என்ன விடையங்களை சொல்லப் போகின்றார்கள், அதுமாத்திரம் அல்ல இந்தியாவினுடைய நீண்கால நட்பாக இருக்கக்கூடிய இலங்கைத் தமிழ் மக்கள் இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாத வகையில் எவ்வாறு நடந்துகொள்ளப் போகின்றார்கள், இந்த விடையத்தை எவ்வாறு இந்தியாவிடம் கலந்துரையாட போகின்றார்கள் என பல பிரச்சினைகள் இருக்கின்றது.

குறிப்பாக வடகிழக்கு என்பது இந்தியாவிற்கு அன்மையில் உள்ள பிரதேசம் என்பதும், இதற்குள் சீனா வெவ்வேறு பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றை காட்டி வருவதென்பது இந்தியாவிற்கு மேலும் பாதிப்பைத்தான் உருவாக்கும்.

இதனை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தக் கூடாது, தமிழ் அரசியல் கட்சிகள் இது தொடர்பாக மிக தெளிவான சிந்தனைக்கு வரவேண்டும்.

எமக்கு மிக அண்மையில் இருக்கக்கூடிய அண்டை நாடு மற்றும் நட்பு நாடு இந்தியா, 7 கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இருக்கக்கூடிய நாடு இந்தியா.

அவ்வாறானதொரு நாட்டினுடைய பாதுகாப்பிற்கு குதகம் விளைவிக்கக்கூடிய வகையிலான எந்த செயல்பாடுகளையும் இலங்கை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்த வகையில் இப்போது ஏற்பட்டுக்கோண்டு வருகின்ற பிரச்சினையென்பது, ஒரு பாரதூரமான நிலைக்கு இலங்கை அரசாங்கம் இந்த நாட்டை உட்படுத்துகின்றது என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

ஆகவே இலங்கை அரசாங்கம் இதனை எவ்வாறு சீர் செய்யப்போகின்றது என்ற பிரச்சினை இருக்கின்றது. அதே வேளை இலங்கைத் தமிழ் மக்கள் உறுதியான சில நிலைப்பாடுகளை எடுத்து, தம்மை பாதுகாப்பது மாத்திரமல்ல, தம்மை பாதுகாப்பதன் ஊடாக இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் செயல்படவேண்டும் எனும் தேவை வந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.

இதனை தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் சகல கட்சிகளும் ஒருமித்த முடிவாக எடுத்து செயல்பட வேண்டியது காலத்தினுடைய தேவையாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE