Wednesday 2nd of December 2020 12:00:36 PM GMT

LANGUAGE - TAMIL
-
கனடாவுக்கான இலங்கையின் புதிய தூதர் நியமனத்தை நிராகரிக்குமாறு ட்ரூடோ அரசிடம் கோரிக்கை!

கனடாவுக்கான இலங்கையின் புதிய தூதர் நியமனத்தை நிராகரிக்குமாறு ட்ரூடோ அரசிடம் கோரிக்கை!


கனடாவுக்கான இலங்கை தூதராக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஏர் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமனத்தை நிராகரிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை கனடிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இதனை வலியுறுத்தும் தமது கோரிக்கைக் கடிதத்தை கனடிய வெளிவிவகார அமைச்சர் அலுவலகத்திற்கு கனடிய தமிழர் தேசிய அவை அனுப்பி வைத்துள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதி மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு இப்போது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இலங்கைத் தீவில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்ததாக இவா்கள் மீது நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அவர்கள் இருவரும் தமிழர் எதிர்ப்பு கோஷங்களுடன் சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக எந்தவொரு படையினரையும் தண்டிக்கப்போவதி்லை்லை என இவா்கள் உறுதியளித்துள்ளனர்.

இவா்களின் தலைமையில் தற்போது இராணுவத்தில் உயர் பதவி வகித்தவர்கள் உயர்மட்ட அரசாங்க பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

சர்வதேச மட்டத்திலும் இராஜதந்திர ரீதியில் தங்கள் கடந்த காலக் குற்றங்களுக்கு வெள்ளை அடிக்கும் நோக்கில் இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுத் தூதர் உள்ளிட்ட நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்போது கனடாவுக்கான இலங்கை தூதராக ஏர் மார்ஷல் சுமங்கல டயஸை நியமிக்க இலங்கை அரசு முயற்சிக்கிறது. ஏர் மார்ஷல் சுமங்கல டயஸ் இலங்கை விமானப்படை கட்டளை அதிகாரியாக உயர் பதவிகளை வகித்தவர். இவரது சேவைக் காலத்தில் இவரது கட்டளையின் கீழ் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக எதிராக நம்பத்தகுந்த போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

சுமங்கலா டயஸின் கட்டளையின் கீழ் இடம்பெற்ற இனப் படுகொலை போரில் ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான கனடியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் இழந்துள்ளனர்.

மருத்துவமனைகள் மற்றும் அப்பாவி மக்கள் ஒன்றுகூட்டப்பட்ட யுத்த சூனிய வலயங்கள் மீதும் வான்வழி தாக்குதல்களை நடத்தி அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறான இனப்படுகொலை தாக்குதல்களில் தங்கள் உறவுகளை இழந்து தப்பிய பலர் இன்று கனேடிய குடிமக்களாக உள்ளனர். அவர்கள் அதிர்ச்சிகரமான அனுபவத்திலிருந்து வந்து முன்னேற்றத்துக்காகக் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் கனேடியத் தூதராக ஏர் மார்ஷல் சுமங்கல டயஸின் நியமனத்தை ஏற்கும் முன்னர் அவர் குறித்த நற்சான்றிதழ்களை முழுமையாக ஆராயுமாறு கனடிய அரசாங்கத்தை நாங்கள் வற்புறுத்துகிறோம். இலங்கை அரசின் சூழ்ச்சிகளுக்கு கனடா இரையாகக்கூடாது எனக் கோருகிறோம்.

நம்பகமான குற்றம் சாட்டப்பட்ட போர்க்குற்றவாளிகளை தூதர்களாக நியமிப்பதை நிராகரிக்குமாறு கோருகிறோம் எனவும் கனடிய தமிழர் தேசிய அவை கனடா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: கனடா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE