Thursday 18th of April 2024 08:19:21 PM GMT

LANGUAGE - TAMIL
-
பெரும்பான்மை வாக்குகளினால்  பருத்தித்துறை பிரதேச சபை பட்ஜட்  இன்று நிறைவேற்றம்!

பெரும்பான்மை வாக்குகளினால் பருத்தித்துறை பிரதேச சபை பட்ஜட் இன்று நிறைவேற்றம்!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து மூன்றாவது வருடமாகவும் பெரும்பான்மை வாக்குகளால் வரவு - செலவுத் திட்டம் நிறைவேறியுள்ளது.

இதற்கு ஆதரவாக 16 பேரும், எதிராக 4 பேரும் வாக்களித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 8 பேரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த 4 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த 2 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் தலா ஓர் உறுப்பினருமாக 16 பேர் ஆதரவாக வாக்களித்தனர். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா இரண்டு உறுப்பினர்களுமாக 4 பேர் எதிராக வாக்களித்தனர். ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ஒருவர் சமுகமளிக்கவில்லை.

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் அ.சா.அரியகுமார் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமானது.

தவிசாளர் அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து சபையின் அங்கீகாரத்தைக் கோரினார். அதற்கமைய அங்கீகாரத்தைப் பெற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அ.சா.அரியகுமார் (தவிசாளர்), கு.தினேஷ் (உப தவிசாளர்), க.தவயோகநாதன், த.சந்திரதாஸ், க.ஸ்ரீகாந்தரூபன், தி.தியாகலிங்கம், ஆ.சுரேஷ்குமார், சி.பிரசாத் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கி.ஜெயபாலன், ஞா.தர்ஷன், திருமதி ரஜிதா விஜயழகன், திருமதி சி.கவிதா ஆகியோரும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த வே.பிரசாந்தன், எட்வேட் எட்வின் ஆகியோரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இ.நாகேந்திரராஜாவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த பொன்னுச்சாமி பிரேமதாஸும் ஆதரவாக வாக்களித்தனர்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கா.அரசரட்ணம், ஞா.பாலரமேஷ் ஆகியோரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் (ஈ.பி.டி.பி.) சேர்ந்த செல்வி சாந்தாதேவி தர்மரட்ணம், திருமதி கலாவதி பரமேஷ்வரன் ஆகியோரும் எதிராக வாக்களித்தனர்.

ஈ.பி.டி.பியின் மற்றைய உறுப்பினரான செ.செபஸ்தியான் இன்றைய சபை அமர்வுக்குச் சமுகமளிக்கவில்லை.

வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகளும், எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 12 வாக்குகள் வித்தியாசத்தில் - பெரும்பான்மைப் பலத்துடன் அது வெற்றி பெற்று சபையில் நிறைவேற்றப்பட்டது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE