Saturday 20th of April 2024 04:24:55 AM GMT

LANGUAGE - TAMIL
-
பூநகரி பிரதேச சபையின் செயற்பாடுகளிற்கு  செயலாளர் முட்டுக்கட்டையாக இருப்பதாக த.தே.கூ குற்றச்சாட்டு!

பூநகரி பிரதேச சபையின் செயற்பாடுகளிற்கு செயலாளர் முட்டுக்கட்டையாக இருப்பதாக த.தே.கூ குற்றச்சாட்டு!


கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் செயற்பாடுகளிற்கு சபை செயலாளர் முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டுகின்றனர். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரதேச சபையை தமது ஆளுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைத்துள்ள நிலையில் சபையின் கடந்த கால செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என மக்கள் சாடுகின்றனர். குறித்த சாடுகையை ஊடகவியலாளர் வினாவாக எழுப்பியபோது அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் பூநகரி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

2020ம் ஆண்டுக்கான பாதீட்டின் நிரந்தர வேலைகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது உள்ளதாகவும், அதற்கு பிரதேச சபைசெயலாளர் பின்னடிப்பதாகவும் இதன்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் தம்மை நம்பி வாக்களித்த சபையை பொறுப்பு தந்த பிரதேச மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். குறித்த விடயங்களை பூநகரி பிரதேச சபையின் உப தவிசாளர் சிறிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டுக்கான பாதீடு அனைத்து சபை உறுப்பினர்களாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் இன்று வரை அதனை நிறைவேற்றுவதற்கு சபை செயலாளர் இழுத்தடிப்பு செய்கின்றார். அவரது செயற்பாடுகளும் ஒத்துழைக்காமையுமே சபையின் செயற்பாடுகளிற்கு இடையூறாக அமைந்துள்ளது. சபை பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் குறித்த செயலாளர் பொறுப்புக்களை ஏற்று 18 மாதங்கள் ஆகியுள்ளது.

ஆரம்பத்தில் செயற்பாடுகள் பல விட்டுக்கொடுப்புக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்ட போதிலும் செயலாளரின் நடவடிக்கைகள் மற்றும் அணுகுமுறைகள் சபை செயற்பாடுகளிற்கு இடையூறாக காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

செயலாளரை மாற்றி தருமாறு பல்வேறு எழுத்துமூல கோரிக்கைகள் சம்மந்தப்பட்டவர்களிற்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், அவர் வேண்டுமென்று இழுத்தடிப்பதினாலேயே சபையின் செயற்பாடுகளை கொண்டு செல்ல முடியாது உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செயலாளரை குற்றம் சாட்டும் பிரதேச சபை அவர் கடமைகளை பொறுப்பேற்கும் முன்னரும் திருப்திகரமாக செயற்படவில்லை எனவும், வினைதிறனற்ற சபையாகவே உள்ளதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. இதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா என ஊடகவியலாளர் வினவினார்.

அதற்கு பதில் அளித்த அவர், சபையின் செயற்பாடுகளின் ஊடாக மக்களிற்கு முழுமையான சேவையை பெற்றுக்கொடுக்க சபைக்கு வருமானம் போதிய அளவு காணப்படவில்லை எனவும், அதனால் அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடிவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சபைக்கான வருமானத்தை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க தவறியமைக்கான காரணம் என்ன என ஊடகவியலாளர் இதன்போது வினவினார். வருமானத்தை அதிகரிக்காமல் இல்லை. நாம் அதிகரித்துள்ளோம். ஆயினும் அது போதுமானதாக இல்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.

பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு ஆனவரி உள்ளிட்ட வரிகளை விதித்து பெற்றுக்கொள்ள முடியும். ஏன் அதனை நீங்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை என அவரிடம் வினவியபோது, அது எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

சபையினால் மேற்கொள்ளப்படும் நீர் வினியோகம், கழிவகற்றல் உள்ளிட்ட செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுவதாகவும், கடந்த பாதீட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நிரந்தர அபிவிருத்தி சார்ந்த விடயங்களை முன்னெடுக்கவில்லை எனவும், அதற்கு தடையாக பிரதேச சபையின் செயலாளரின் செயற்பாடுகளே காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் செயலாளர் கம்சநாதனை தொடர்புகொள்ள எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE