Friday 19th of April 2024 11:15:16 AM GMT

LANGUAGE - TAMIL
-
30,000 ரோபோ இராணுவத்தை போரில்  களமிறக்கத் திட்டமிடும் இங்கிலாந்து!

30,000 ரோபோ இராணுவத்தை போரில் களமிறக்கத் திட்டமிடும் இங்கிலாந்து!


2030 ஆம் ஆண்டு இங்கிலாந்து இராணுவத்தில் 30,000 ரோபோக்கள் களமிறக்கப்படவுள்ளதாக இங்கிலாந்து ஆயுதப் படைகளில் தலைவர் ஜெனரல் நிக் கார்ட்டர் தெரிவித்துள்ளார்.

சவாலான சூழலை எதிர் கொள்ள இராணுவத்தை நவீனமயமாக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்கை நியூஸுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்த அவர், போர்க்களங்களில் முன்னரங்குகளில் இந்த இராணுவ ரோபோக்கள் களமிறக்கப்படும் எனக் கூறினார்.

2030-இல் எங்கள் இராணுவத்தின் சுமார் 30,000 ரோபோக்கள் இருக்கலாம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் போராடி வருகிறது. இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த இடைவெளியை நிரப்ப ரோபா இராணுவத்தை களமிறக்கத் திட்டமிட்டு வருகிறோம்.

ஆனால் மனிதர்கள் மட்டுமே ஆயுதங்களைக் கையாள வேண்டும் என்பதே பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சின் கொள்கையாக உள்ள நிலையில் இது குறித்து ஆராயப்படும் எனவும் நிக் கார்ட்டர் கூறினார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உலகளாவிய ரீதியில் தற்போது நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை மற்றும் பதட்டம் மற்றொரு உலகப் போருக்கு வித்திடக்கூடும் என பிரிட்டனின் ஆயுதப்படைகளின் தலைவர் நிக் கார்ட்டர் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE