Friday 29th of March 2024 02:02:18 AM GMT

LANGUAGE - TAMIL
-
பல இலட்சம் பேர் பின்தொடரும்  உலகின் மிகப்பெரிய வாய்க்காறி!

பல இலட்சம் பேர் பின்தொடரும் உலகின் மிகப்பெரிய வாய்க்காறி!


உலகின் மிகப்பெரிய வாயைக் கொண்டவராகக் கருதப்படும் ஒரு பெண் அதனையே தனக்குச் சாதகமாக்கி பல கோடிகளைச் சம்பாதித்து வருகிறார்.

தனது பெரிய வாயைக் கொண்டு காண்போரை மகிழ்விக்கும் வகையில் வித்தியாசமான வீடியோக்களை ரிக்டாக் குறும் வீடியோ சமூக ஊடக செயலியில் அவர் வெளியிட்டுவருகிறார்.

இதனை மில்லியன் கணக்கானோர் பார்வையிடுவதால் அவருக்குப் பணம் குவிகிறது.

தான் பதிவிடும் ஒவ்வொரு வீடியோ மூலமும் சுமார் 15,000 டொலர் வரை சம்பாதிப்பதாக அமெரிக்கா கனெடிகட் பகுதியைச் சேர்ந்த சமந்தா ராம்ஸ்டெல் என்ற இந்த 30 வயதுப் பெண் கூறுகிறார்.

தனக்கு வாயே மூலதனம் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சமூக முடக்கல் காலப்பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 7 இலட்சத்து 40 ஆயிரம் போ் தன்னை ரிக்டாக்கில் பின்தொடர்ந்ததாக சமந்தா ராம்ஸ்டெல் குறிப்பிடுகிறார்.

கோவிட்19 தொற்று நோயால் தனது நகைச்சுவை வீடியோக்கள் எடுபடாது. எனது வருவாய் பாதிக்கப்பட்டுவிடும் என நான் கவலைப்பட்டேன் எனக் கூறும் இப்பெண், ஆனால் எதிர்பார்ப்புக்கு மேல் இந்தக் காலப்பகுதியில் அதிகளவானவர்கள் என்னைப் பின் தொடர்ந்தனர் எனவும் தெரிவிக்கிறார்.

ரிக்டாக் அதன் வீடியோ பதிவாளர்களுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துப் பணம் செலுத்துகிறது. சுமார் ஆயிரம் பார்வையாளர்களைக் கொண்ட வீடியோவிக்கு 0.3 டொலர் என்ற அடிப்படையில் ரிக்டாக் பணம் வழங்குகிறது.

இந்தத் தொகை அதிகம் இல்லை என்றாலும் தனது சில சிறந்த வீடியோக்களை 50 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளதால் அதிக பணம் தனக்குக் கிடைப்பதாகவும் பெரிய வாய்காறியான சமந்தா ராம்ஸ்டெல் கூறுகிறார்.

ஆரம்பத்தில் சாதாரணமாகவே பாடல்களைப் பாடியும் ஆடியும் தனது வீடியோக்களை சமந்தா ராம்ஸ்டெல் ரிக்டாக்கில் பகிர்ந்தார்.

ஆனால் எனினுடைய பெரிய வாய்தான் அதிகம் பேரை ஈர்க்கிறது என்பதைப் போகப்போகப் புரிந்துகொண்டேன் எனவும் அவர் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE