Saturday 20th of April 2024 01:59:46 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலை திறக்கப்பட்டது!

கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலை திறக்கப்பட்டது!


கிளிநொச்சியில் வடக்கிற்கான தொற்றுநோய் விசேட மருத்துவமனை இன்று திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கின் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் பங்குகொண்டிருந்தனர்.

இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கென விளையாட்டு மைதானம் பிரார்த்தனை மண்டபம் நூலகம் உள்ளக விளையாட்டரங்கம் திறந்த வெளித் திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் நீண்ட காலம் தங்க நேரிடுபவர்கள் தாம் விரும்பிய உணவு பானங்கள் உள்ளிட்ட பாவனைப் பொருட்களை அவர்களாகவே வெளியிலிருந்து இணையத்தளம் ஊடாக வாங்கிக் கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தற்போது 200 நோயாளர்கள் ஒரே தடவையில் தங்கி சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ் வைத்தியசாலையானது எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கப்பட்டு அதிவிசேட தொற்றுநோயியல் ஆய்வுகூடங்கள் மற்றும் சிறப்பு வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

தேசிய வைத்தியசாலைகளது தரத்திற்கு பிரதேசத்தில் ஒரு வைத்தியசாலையினை மேம்படுத்தும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கு அமைய மத்திய சுகாதாரஅமைச்சினால் இவ்வைத்தியசாலை தொடர்ந்தும் மேம்படுத்தப்படவுள்ளதாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE