Friday 19th of April 2024 05:44:25 PM GMT

LANGUAGE - TAMIL
.
ருமேனியா கொரோனா மருத்துவமனையில் தீவிபத்து: நோயாளிகள் பத்து பேர் பலி!

ருமேனியா கொரோனா மருத்துவமனையில் தீவிபத்து: நோயாளிகள் பத்து பேர் பலி!


ருமேனியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 நோயாளிகள் உயிரிழந்தனர். அத்துடன், கடமையில் இருந்த மருத்துவர் ஒருவர் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

பியட்ரா நீம்ட் கவுண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று சனிக்கிழமை தீப்பற்றியது. தொடர்ந்து அங்கிருந்து வேறு பகுதிகளுக்கும் தீ வேகமாகப் பரவியது.

எனினும் இந்தத் தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என ருமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு ருமேனிய நகரமான ஐயாசியில் உள்ள இந்த கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவித்தில் இருந்து தப்பிய 6 நோயாளிகள் வேறு மருத்துமனைக்கு மாற்றப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் நெலு டாடரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உடலில் 40% கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் தலைநகர் புக்கரெஸ்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் எனவும் டாடரு கூறினார்.

ருமேனிய தலைநகர் புக்கரெஸ்டில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒரு இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 65 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட மோசமாக தீவிபத்தாக வைத்தியசாலைத் தீவிபத்து கருதப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகக் குறைந்த சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நாடான ருமேனியாவில் இதுவரை 353,185 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,813 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று சனிக்கிழமை வரையான தரவுகளின் பிரகாரம் சுமார் 13,000 கொரோனா தொற்று நோயாளர்கள் ருமேனியாவில் உள்ள மரு்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவா்களில் 1,172 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE