Tuesday 16th of April 2024 08:56:14 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிரேட்டர் ரொரண்டோ பகுதிகளில்  வீசிய கடும் காற்றால்  பலத்த சேதங்கள்!

கிரேட்டர் ரொரண்டோ பகுதிகளில் வீசிய கடும் காற்றால் பலத்த சேதங்கள்!


ஒன்ராறியோ – மாகாணம் கிரேட்டர் ரொரண்டோ பகுதிகளில் வீசிய கடும் காற்றால் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் பல மரங்கள் பாறி விழுந்ததுடன், பல இடங்களில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. அத்துடன் சில இடங்களில் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.

கிரேட்டர் டொராண்டோ பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான காற்று வீசியது.

கிரேட்டர் ரொரண்டோ பகுதிகளில் மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என கனடா சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் எச்சரித்திருந்த நிலையில் இந்தச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

துண்டிக்கப்பட்ட மின் இணைப்புக்கள் விரைவில் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான கால எல்லை அறிவிக்கப்படவில்லை.

உள்ளூர் நேரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணி நிலவரப்படி கிரேட்டர் ரொரண்டோ பகுதிகளில் 3,300 வீடுகள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன. நகரின் கிழக்கு முனையிலேயே பெரும்பான்மையானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீல், யோர்க், ஹால்டன் மற்றும் டர்ஹாம் பிராந்தியங்களில் சில பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டது.

கிரேட்டர் ரொரண்டோ பகுதிக்கு வெளியே 217,000 க்கும் மேற்பட்டவர்கள் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலநிலை மோசமாக உள்ளபோதும் தடைகளை அகற்றி மின் இணைப்புக்களைச் சீர் செய்யும் பணியில் இரவு – பகலாக தமது பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக ரொரண்டோ தீயணைப்புத் துறைத் தலைவர் மத்தேயு பெக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிரேட்டர் ரொரண்டோ பகுதிகளில் பல வீடுகளில் கூரைகள் காற்றில் பறந்தன. சில பகுதிகளில் வாகனப் போக்கு வரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. பல இடங்களில் வீதி சமிக்ஞை விளக்குகள் இயங்கவில்லை. காற்றில் பறந்த பொருட்களால் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கிரேட்டர் ரொரண்டோவின் பல பகுதிகளில் காலநிலை சிக்கலாக உள்ளது. அத்தியாவசிய வேலைகளைத் தவிர பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பயணங்களைத் தவிர்த்து வீடுகளில் இருப்பதே பாதுகாப்பானது என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT
MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE