Wednesday 24th of April 2024 07:23:31 PM GMT

LANGUAGE - TAMIL
.
மிக மோசமான வரவு - செலவுத் திட்டம்: எதிர்த்தே வாக்களிப்போம்! - சம்பந்தன்!

மிக மோசமான வரவு - செலவுத் திட்டம்: எதிர்த்தே வாக்களிப்போம்! - சம்பந்தன்!


"நாட்டு மக்களை ஏமாற்றும் மிக மோசமான வரவு - செலவுத் திட்டத்தையே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு முன்வைத்துள்ளது."

- இவ்வாறு சாடினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இந்த வரவு - செலவுத் திட்டம் நாட்டையும் மக்களையும் மேலும் கடன் பொறிக்குள் சிக்கவைத்துள்ளது. ஏற்கனவே நாடு பாரிய கடன் பொறிக்குள் அகப்பட்டு சர்வதேசத்திடம் தொடர்ந்து கையேந்தும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் மிகவும் மோசமான வரவு - செலவுத் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது.

நாடு கடன் பொறியில் சிக்கிக்கொண்டிருக்கும்போது அபிவிருத்தி எப்படி சாத்தியமாகும்? இது நாட்டு மக்களை ஏமாற்றும் மிகவும் மோசமான வரவு - செலவுத் திட்டம் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இதனூடாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மீது மேலும் சுமைகளை அரசு ஏற்றியுள்ளது.

இந்த வரவு - செலவுத் திட்டத்தை நாம் ஆதரிக்கவேமாட்டோம். நிச்சயம் எதிர்த்தே வாக்களிப்போம்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE