Friday 19th of April 2024 11:26:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஆயுதப் போரைக் கைவிட்டு கொரோனாவுக்கு  எதிராகப் போரிடுமாறு உலகுக்கு ஐ.நா. அழைப்பு!

ஆயுதப் போரைக் கைவிட்டு கொரோனாவுக்கு எதிராகப் போரிடுமாறு உலகுக்கு ஐ.நா. அழைப்பு!


சர்வதேச அளவில் இடம்பெற்றுவரும் போர்களை நிறுத்தி, துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆயுதப் போருக்குப் பதிலாக கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபடுமாறு போரிடும் தரப்பினரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக உணவுத் திட்ட நிழ்வொன்றில் பேசிய அவர், தொற்று நோய்க்கு மத்தியில் உலகில் ஏராளமானவர்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

உலகில் அமைதியை ஏற்படுத்துவதில் உணவுப் பாதுகாப்பு முக்கிய பங்காற்றுகிறது எனவும் அவர் கூறினார்.

வெற்று வயிறு என்பது ஒரு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் அர்ப்பணிப்பு, தாராள மனப்பான்மையுடன் ஆபத்துக்களையும் கடந்து மக்களின் அன்றாட உணவுக்கு வழி செய்யும் மகத்தான பணியை உலக உணவுத் திட்டம் முன்னெடுத்து வருவதாகவும் அந்தோனியோ குட்டெரெஸ் பாராட்டுத் தெரிவித்தார்.

பல இடங்களில் துப்பாக்கிகள், குண்டுகளுக்கு மத்தியில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவுவதில் உலக உணவுத் திட்டத்தின் பங்கு அளப்பரியது என அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை உலக உணவுத் திட்ட அமைப்புக்கு வழங்க நோபல் பரிசுக் குழு எடுத்த முடிவையும் அவர் பாராட்டினார்.

உலகெங்கும் பல நாடுகளில் மக்கள் பட்டினியுடன் போராடும் நிலை அதிகரித்து வருகிறது என்றும் குட்டெரெஸ் கூறினார்.

உலக உணவுத் திட்டத்தின் புள்ளி விபரங்களைச் சுட்டிக்காட்டி உலகில் சுமார் 690 மில்லியன் மக்கள் சாப்பிட போதுமான உணவின்றி உள்ளதாக அவா் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்புக்குச் செல்லக்கூடும். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.

இதேவேளை, உலக உணவுத் திட்டத்தின் முயற்சிகளுக்கான நிதிப் பங்களிப்பை வழங்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE