Friday 29th of March 2024 07:51:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா தொற்றாளர்களுக்கு சுதேச வைத்திய மருந்துப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன!

கொரோனா தொற்றாளர்களுக்கு சுதேச வைத்திய மருந்துப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன!


கோவிட்-19 தொற்று ஏற்பட்டு கிழக்கு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற, தொற்றாளர்களுக்கு அவர்களது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சுதேச வைத்திய மருந்துப் பொருட்களை வழங்க இருப்பதாக கிழக்கு மாகாணம் ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை வெளிப்படுத்தினார்.

கிழக்கு மாகாணத்தில் covid-19 தொடரிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பல வகையிலான முயற்சிகளை தாம் எடுத்து வருவதாகவும், அதன் ஒரு அங்கமாக சந்துன் வெத மதுர எனும் சுதேச வைத்திய நிலையத்தினால் வழங்கப்பட்ட மருந்து பொருட்களை கிழக்கு மாகாண கொரோணா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கிடைக்கப் பெற்று இருக்கின்ற இந்த மருந்து வகைகளில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இதனை நாங்கள் இங்கு வழங்குகின்றோம். மேலும் இவை கொரோணா தொற்றை முற்றுமுழுதாக குணமாக்கும் மருந்துகள் அல்ல இருப்பினும் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்காக இவற்றை நாம் பயன்படுத்த முடியும் எனவும் இவை பல வருட காலமாக எமது நாட்டில் நடைமுறையிலிருந்து வந்த வைத்தியமுறைகள் என அவர் இதன்போது தெரிவித்தார்.

பல மாகாணங்கள் கொரோனா பேரிடரில் இருந்து மீண்டுவர போராடும் தற்போதைய சூழ்நிலையில் எமது கிழக்கு மாகாணம் ஆனது ஓரளவுக்கேனும் பொருளாதார நிலையில் இன்னமும் நிலைத்திருப்பதை இட்டு தாம் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE