Saturday 20th of April 2024 03:04:56 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா?

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா?


இலங்கை -இந்திய அரசியல் உறவு ஏற்றமும் இறக்கமும் கொண்டதாகவே அமைந்துவருகிறது. அதிலும் இலங்கையில் சீன சார்பு நிலை எடுக்கும் போதெல்லாம் இந்தியாவின் கடும் போக்கு அமைவதும் பின்பு சுமூகமாவதும் வழமையான அரசியலாக தெரிகிறது. ஆனால் தற்போதைய இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் கோபால் பால்கே பதவியேற்ற பின்பு இலங்கை தொடர்பில் இந்தியாவின் கடும் போக்கு அதிகரித்துள்ளது என்ற கருத்து ஏற்பட ஆரம்பித்துள்ளது. இது சரியானதா இல்லையா என்பது இந்தியாவின் அடைவிலேயே தங்கியுள்ளது. அது முழுக்க முழுக்க இந்தியாவின் புவிசார் நலனைப் பற்றியதாகவே அமையும். அந்த வகையில் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளை அவதானிப்பதன் ஊடாக இலங்கையின் பூகோள அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை தேடுவதே இக்கட்டுரையின் பிரதான எண்ணமாகும்.

முதலாவது 05.11.2020. அன்று சிங்களே அமைப்பானது நடாத்திய ஊடக சந்திப்பொன்றில் அதன் அமைப்பின் பொதுச் செயலாளர் மடில்லே பன்னலோக தேரர் கொரனே வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு மற்றும் உபாய மார்க்க ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டாவது கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தித் திட்டத்தை இந்தியா ஜப்பானுடன் சேர்ந்து கைச்சாத்திடுவதற்கு அமெரிக்கா உந்துதலாக இருந்ததுடன் 2019 மேயில் இது தொடர்பில் செய்யப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் செயல்பட இந்தியா முனைகிறது. 2015 இல் 500 பில்லியன் அ.டொ. செலவில் இத்திட்டத்திற்கான செயல்பாடுகள் மேற்கொள்ள திட்டமிட்ட போதும் 2019 மே மாதமே இதற்கான உடன்பாட்டில் இந்தியா கைச்சாத்திட்டது.நவம்பரில் ஜனாதிபதியாக கோட்டபாயா ராஜபக்~h ஆட்சிக்கு வந்த பிற்பாடு அதற்கான அனைத்து நகர்வுகளும் கைவிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இலங்கைக்கான இந்திய தூதுவர் கிழக்கு முனைய அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகின்றார்.

மூன்றாவது 29.10.2020 அன்று இணையவழிக் கருத்தாடல் ஒன்றில் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே ஆசியான்-இந்திய மையம் உலகவிவகாரத்துக்கான இந்திய பேரவை மற்றும் பாத்பைன்டர் என்பன இணைந்து மேற்கொண்ட கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் அபிவிருத்தித் திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் விரிவாக விளக்கியிருந்தார். அது மட்டுமன்றி அதனை உடனடியாக ஆமல்படுத்ரத வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதற்கு வலுவ5hன காரணம் ஒன்றும் உள்ளது அதாவது சீனாவின் ஓரே சுற்று ஓரே பாதை எனும் திட்டத்தின் வரைபடத்தின் கீழ் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.

நான்காவது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்திகள் அனைத்தும் இலங்கையினதாக இருக்க வேண்டும் எனவும் நூறு சதவீதக் இத்திட்டம் இலங்கையருக்கானதாக அமைய வேண்டும் எனவும் கோரிக்கை முன் வைத்து துறைமுக ஊளியர்களும் பௌத்தமத பிக்குகளும் பேராட்டம் நடாத்தியுள்ளனர். இத்தகைய போராட்டத்தினை காரணம் காட்டியே கிழக்சுகு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க மறுக்கிறது இலங்கை.

ஐந்தாவது கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் அண்மையில் விஜயம் மேற்கொண்ட மைக் பாம்பியோ ஜனாதிபதி கோட்டபாயா ராஜபக்சவுடன் உரையாடியதாக புதுடில்லி அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆறாவது இந்துசமுத்திரத்தில் சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான புவுpசார் மூலோபாயத் தேவைக்கு இலங்கை அரசாங்கம் அவசியம் என்பதை அமெரிக்காவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஜோ பெடன் நிர்வாகம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்காது என்று எதிர்பார்ப்பதுடன் காலப்போக்கில் குவாட் அமைப்புக்குள் இலங்கையை கொண்டுவர முயற்சிக்க் கூடும் என இந்திய அரசியல் ஆய்வாளர் பி.கே.பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இலங்கை ஆட்சியாளர்கள் அதிகம் நெருக்கடிக்குள்ளாவது போன்ற ஒரு புறச்சூழல் தென்பட்டாலும் அதனை கையாளும் திறன் அச்சூழலுக்குள் காணப்படாமல் இல்லை என்றே தெரிகிறது.அமெரிக்க புதிய நிர்வாகம் அதனது வெளியுறவுக் கொள்கையில் அதிக மாற்றங்களை செய்யாது என்பது மட்டுமல்ல அத்தகைய கொள்கை அனைத்தும் அமெரிக்க தேசிய நலனை மையப்படுத்தியதாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எப்போதும் அமெரிக்க நிர்வாகம் அமெரிக்க தேசிய நலனில் கரிசனை கொண்டதாகவே அமைந்திருக்கும். அதற்காக ஜனாதிபதி ட்ரம்ப் இன் பலவீனமான கொள்கைகளை அனுசரித்து போகும் என்று குறிப்பிட முடியாது. ஆனால் இந்தியாவுடன் அமெரிக்கா கொண்டுள்ள நெருக்கமும் இந்தோ-பசுபிக் உபாயத்தில் குவாட் அமைப்பின் திட்டமிடலும் அமெரிக்க நலனுக்கானது. அமெரிக்கா சார்ந்த மேற்கின் நலன்களை உத்தரவாதப்படுத்தும் விதத்திலும் சீனாவுக்கு எதிரானதுமாகவே அமைந்துள்ளது. அதனால் அத்தகைய பொறிமுறைகளை ஜோ பிடன் நிர்வாகம் கண்டுகொள்ளாது விடும் என வாதிக்க முடியாது.

ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் ஏற்கனவே சீனாவை முன்நிறுத்தியே இந்தியாவை கையாண்டது போல் தற்போது இந்தியாவையும் அமெரிக்காவையும் ஏன் குவாட் நாடுகளையும் கையாள திட்டமிடுகின்றனர். இதில் இந்தியாவின் போக்கே அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாம்பியோவின் விஜயம் இந்தியாவுக்கு பின்பே இலங்கைக்கானதாக அமைந்திருந்தது. அதனால் இந்தியாவின் உபாயத்திற்குள்ளேயே இலங்கையை அமெரிக்கா பார்த்திருக்க வாய்பிருந்தது. அதாவது இந்தியாவும் இலங்கையும் இணைந்து இலங்கையை கையாள திட்டமிட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதுவே அமெரிக்கா மென் போக்கை கடைப்பிடிக்க இந்தியா நெருக்கடியான கடும் போக்கினை மேற்கொள்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எதுவாயினும் இலங்கைக்குள் சீனா சார்ந்து எழுந்துள்ள கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் புவிசார் அரசியல் போக்கில் நெருக்கடியை நோக்கியுள்ளது. அதனை எப்படி இலங்கை வெற்றி கொள்ளும் என்பதே பிரதான கேள்வியாகும்.

சீனாவின் கடன்பொறிக்கு பதிலாக அமெரிக்கா பொருளாதார முதலீடுகளை மேற்கொள்ள வழிவகை காணவேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி பாம்பியோவுடன் உரையாடும் போது தெரிவித்ததாகவும் அதற்கான துறைகள் அடங்கிய பட்டியல் ஒன்றினை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பாம்பியோவிடம் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா கையளித்ததாகவும் தெரியவருகிறது.

அவ்வாறே அமெரிக்காவில் தெரிவான புதிய ஜனாதிபதி பெடன் பதவியேற்ற பின்னர் நடாத்தவுள்ள ஜனநாயகம் தொடர்பிலான மகாநாட்டில் இலங்கை அதிக முக்கியத்துவம் கொடுக்க முனையும். குறிப்பாக பெடன் வெற்றி பெற்றதும் வாழ்த்துத் தெரிவித்த தலைவர்களில் இலங்கை ஜனாதிபதி முக்கியமானவர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மனித உரிமையிலும் இனநல்லிணக்கத்திலும் அதிக அக்கறையுடைய ஜனநாயகக் கட்சி என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் நன்கு விளங்கி வைத்துள்ளனர் எனபது அவர்களது அணுகுமறையில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு விளங்கிக் கொள்ள முடியும்.அவ்வாறே மிலேனியம் சவால் உடன்பாடு பற்றி இலங்கை ஜனாதிபதி மீள உரையாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பெடன் நிர்வாகம் மீளாய்வு செய்ய உடன்படக் கூடும் என்ற தகவலை பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கை புவிசார் அரசியலிலும் பூகோள அரசியலிலும் களமாடும் நிலை ஒன்றினை உருவாக்கியுள்ளது. இதனை வெற்றி கொள்ள இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தையும் அமெரிக்காவுக்கு மிலேனியம் சவால் உடன்படிக்கையையும் முன்னிறுத்தியுள்ளது. தீவுகளையும் சிறிய நாடுகளையும் நோக்கிய அமெரிக்க கொள்கை மாற்றம் இலங்கைக்கு அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு பாதிப்பில்லாத இந்தோ-பசுபிக் பிராந்திய நலனையே இலங்கை முன்னெடுக்குமென வெளியுறவுச் செயலாளர் கொலம்பகே தெரிவித்துள்ளார்.அது மட்டுமன்றி கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை இந்தியா ஜப்பானுக்கு கையளிப்பதற்கு இலங்கை தயாராக உள்ளது என்ற தொனிப்படவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் சீனா அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளவுள்ள திட்டமிடலை மூடிய அறைக்குள் கப்யூனிஸக் கட்சியின் உறுப்பினர்களுடன் கடந்த 04.11.2020 அன்று உரையாடியுள்ளது. இலங்கைத் தீவு அதன் ஓரே சுற்று ஓரே பாதைத்திட்டத்தில் மட்டுமன்றி பிராந்திய அடிப்படையிலும் இந்துசமுத்திர அடிப்படையிலும் முக்கியம் பெறும் நாடாக உள்ளது. அதனால் தனித்து அமெரிக்கா சார்ந்த முடிபுகளை மட்டும் அவதானிக்காது சீனா பக்கமும் அதன் வரைபுகளும் உபாயங்களையும் கவனத்தில் கொள்ளுதல் அவசியமானது. இலங்கை எல்லாவற்றையும் கையாளும் திறன் கொண்டது. ஆனால் சீனா பக்கம் இருந்து கொண்டே செயல்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமானது.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE