Wednesday 24th of April 2024 12:21:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
அரசியலமைப்புக்கான பரிந்துரைகள் தொடர்பான கூட்டம்!

அரசியலமைப்புக்கான பரிந்துரைகள் தொடர்பான கூட்டம்!


இலங்கை அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பு மாற்றத்தில் உணவு உரிமை தொடர்பாகவும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் (ESCR) தொடர்பாகவும் சமூக மட்ட அமைப்புகளின் பரிந்துரைகளை அறிக்கைப்படுத்துவதற்கான கூட்டம் இன்று(20.11.20) நடைபெற்றது.

உணவை பிரதானமாக கொண்ட தகவல் மற்றும் நடவடிக்கைகளுக்கான இலங்கை வலையமைப்பின் (FIAN SRILANKA) ஒழுங்கமைப்பில் இக் கூட்டமானது யாழ் சமூக செயற்பாட்டு மையத்தில் (JSAC) நடைபெற்றத்துடன் நிகழ்நிலையில் (Online) வடமாகாணத்தை சேர்ந்த சமூகமட்ட அமைப்புகளும் ஊடகவியலாளர்களும் பங்கெடுத்திருந்தனர்.

பங்கெடுத்த அமைப்புக்கள் என்ற ரீதியில் யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC), இயற்க்கை வழி இயக்கம் (OMNE), மானுடம் பெண்கள் மேம்பாட்டு மையம் (CWD), சட்டம் மற்றும் மனித உரிமைகள் மையம் (LHRC) Action Unity Lanka, Women In Need (WIN), மன்னார் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைப்பு, சமூக பொருளாதார மேம்பாட்டு அமைப்பு, ஈடுபாடு மற்றும் முயற்சிக்கான மக்கள் அமைப்பு, வவுனியா கிராம பெண்கள் அமைப்பு , ஊனமுற்றோருக்கு மறுவாழ்வுக்கான அமைப்பு, கிளிநொச்சி சிறகுகள் , பெண்கள் சமூக வலையமைப்பு, முல்லைத்தீவு SYPC – இளைஞர் கூட்டாண்மை மற்றும் கூட்டுறவு வலுப்படுத்துதல், முல்லைத்தீவு அரசசார்பற்ற அமைப்புகளின் இணையம் என்பன கலந்துகொண்டிருந்தன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE