Tuesday 1st of December 2020 02:53:38 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா: குருநாகல் மாவட்டத்தின் அனைத்து தபால் நிலையங்களும் மூடுவதற்கு தீர்மானம்!

கொரோனா: குருநாகல் மாவட்டத்தின் அனைத்து தபால் நிலையங்களும் மூடுவதற்கு தீர்மானம்!


தபால் ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவிடயம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரதேசத்தின் தபால் அதிகாரியின் அலுவலகம் மற்றும் குருநாகல் பிரதான தபால் காரியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றும் 14 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதன் காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குருநாகல் அஞ்சல் அதிகாரி காரியாலயத்தில் அண்மையில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியானது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் குறித்த 14 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE