Friday 29th of March 2024 09:23:38 AM GMT

LANGUAGE - TAMIL
.
போலிச் செய்திகளை பரப்பும் இணையத்தளங்களுக்கு கோட்டா அரசு எச்சரிக்கை!

போலிச் செய்திகளை பரப்பும் இணையத்தளங்களுக்கு கோட்டா அரசு எச்சரிக்கை!


"ஆதாரமற்ற போலிச் செய்திகளை வெளியிடும் பதிவு செய்யப்படாத இணையத்தளங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது."

- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துதார்.

குறித்த இணையத்தளங்களைச் தடை செய்வது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை எனவும், இது குறித்து ஆராயப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஒருவருக்கு எதிராக அவதூறு சுமத்தும் நோக்கத்துடன் பதிவு செய்யப்படாத பல இணையத்தளங்கள் சேற்றை வாரியிறைக்கும் தகவல்களை வெளியிடுகின்றன .

எந்த உத்தியோகபூர்வ வழிமுறைகளிலும் பதிவு செய்யப்படாத வெளிநாடுகளில் இருந்து இயங்கும் இந்த இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கருதுகின்றது" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE