Tuesday 23rd of April 2024 04:53:07 AM GMT

LANGUAGE - TAMIL
-
சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா?

சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா?


சமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை அளந்து கொள்ளவும் அதற்கான சந்தர்ப்பத்தை பார்த்திருந்து நகர்த்துவதுமே பிரதான விடயமாகிவிட்டது. அத்தகைய அரசியல் நகர்வு ஒன்று கடந்த 15.11.2020 அன்று நிகழ்ந்துள்ளது. அதனை பொருளாதார உறவாகப்பார்த்தால் மட்டும் போதாது அதனூடான அரசியல் ஒன்றுக்கான கதவும் திறக்கப்பட்டுள்ளது. அது ஆசிய-பசுபிக் வட்டகைக்கான அரசியல் பொருளாதாரமாகவே தெரிகிறது. அதனால் பெரும் தேசங்கள் மட்டுமல்ல இலங்கையும் அதிக பாதுகாப்பினை புவிசார் அரசியலிலும் பூகோள அரசியலிலும் அடைந்துள்ளது. இக்கட்டுரையும் அத்தகைய அரசியல் பொருளாதாரத்தை தேடுவதாக அமைந்துள்ளது.

15.11.2020 அன்று ஆசியான் அமைப்பின் (ASEAN) 10 உறுப்பு நாடுகளும் பசுபிக் பிராந்திய நாடுகளான அவுஸ்ரேலியாஇ சீனாஇ ஜப்பான்இ நியூசிலாந்துஇ தென்கொரியா ஆகிய ஐந்து நாடுகள் உட்பட 15 நாடுகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அமைப்பாக பிராந்திய பொருளாதார விரிவாக்க ஒத்துழைப்பு ( Regional Comprehensive Economic Partnership) விளங்குகிறது. 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் இல் நிகழ்ந்த கிழக்காசிய உச்சி மகாநாட்டில் சீன மற்றும் ஜப்பானிய பொருளாதார அமைச்சர்களது உரையாடல் விரிவான பொருளாதார வழிமுறை குறித்து வெளிப்படுத்த ஆரம்பித்தது.இதன் தொடர்ச்சியாக 2012 இல் கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மகாநாட்டில் பிராந்திய பொருளாதாரம் பற்றிய முதல் கட்ட பேச்சுக்கள் ஆரம்பமாகின. 2012 முதல் 2020 முதல் 29க்கு மேற்பட்ட கூட்டங்களை நடாத்தியதோடு கடந்த 15.11.2020 அன்று வியட்நாம் தலைநகரில் காணொளி மூலம் நிகழ்ந்த மாநாட்டில் 15 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் செயலாளர்கள் மற்றும் துறைசாரர் நிபுணர்கள் கலந்து கொண்டு உடன்படிக்கையில் ஒப்பமிட்டனர்.

உலகளாவிய ரீதியில் பாரிய வர்த்தக பொருளாதார வர்த்தக கூட்டொன்று ஆசிய பசுபிக் நாடுகளில் வலுவான பொருளாதார அமைப்பு என்றும் கூறப்படுகின்றது. உலக மக்கள் தொகையில் 30% இனை ஈடு செய்யும் இந் நாடுகள் உலக வர்த்தகத்தில் 39% பங்களிப்பை வழங்குகின்ற நாடுகளாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஏறக்குறைய 49.5 ரில்லியன் டொலர் முதலீட்டைக் கொண்ட நாடுகள் எனவும் அழைக்கப்படுகின்றது.

இவ் உடன்படிக்கை 15 நாடுகளுக்கும் இடையில் உற்பத்திப் பொருட்களின் தரம், விலைக் கட்டுப்பாடு, உதிரிப் பாகங்களின் பரிமாற்றம், தேவையான வளப் பங்கீடு, தொழிநுட்ப உதவி, உற்பத்தித் திறன், ஊக்குவிப்பு ஆகியவற்றை செயல்படுத்துவதென வரையறுத்திருப்பதோடு அதற்கான விதிமுறைகளையும் உருவாக்கி உள்ளது. இப் பிராந்திய பொருளாதாரக் கூட்டின் பிரதான இலக்காக வர்த்தகத்தை ஊக்குவித்தல், சுதந்திரமான வர்த்தகப் பொறிமுறையை உருவாக்குதல், முதலீட்டை அதிகரித்தல், பிராந்திய நாடுகளுக்கிடையில் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதித்தல், நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதியைப் பலப்படுத்துதல் போன்ற அடிப்படையில் பிராந்தியக் கூட்டை வலுப்படுத்துவதாக உள்ளது.

இவ் அமைப்பை ஆரம்ப கட்டத்தில் இருந்து 28வது கூட்டத் தொடர் வரை நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் கலந்து கொண்டிருந்தது. ஆனால் தாய்லாந்தில் நடைபெற்ற அக் கூட்டத் தொடரில் இந்திய சார்பு நிலையில் முன் வைக்கப்பட்ட முக்கியமான கோரிக்கைகளை பிராந்தியக் கூட்டு ஏற்கத் தவறியதன் விளைவாக இவ் உடன்பாட்டில் கையெழுத்திடாது விலகியமைக்கான காரணமாக இந்திய உள்துறை அமைச்சர் அமீர்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகின்ற போது இப் பிராந்திய ஒத்துழைப்பு உண்மை நோக்கத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் விளைவுகள் நியாயமானவையாக இல்லை என்றும் இறக்குமதி உயர்வுக்கு எதிராக போதிய பாதுகாப்பு இல்லை என்றும் சீனாவுடன் போதிய வேறுபாடு இந்தியாவுக்கு உண்டு என்றும் அடிப்படை விதிகளையும் சந்தை அமைப்பு முறையையும்இ கட்டணமில்லாத தடைகள் போன்றவை தொடர்பில் நம்பகத் தன்மையோ உத்தரவாதமோ இல்லை என்றும் குறிப்பிட்டார். ஆனால் இந்தியா கூறிய காரணங்கள் பொருத்தமற்றவை என்றும் இந்தியா இவ் ஓத்துழைப்பு நிறுவனத்தில் இணைவதற்கான அனைத்து ஒழுங்குகளும் தயாராக உண்டு என்றும் சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறித்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு அமையமானது பிராந்திய அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.

முதலாவது கொவிட் 19 பரவலுக்குப் பின்னர் பிராந்திய அடிப்படையில் அவ்வாறே உலகளாவிய ரீதியிலும் புவிசார் பொருளாதாரம் (புநழ- நுஉழழெஅiஉள) ஒன்றுக்கான வாய்ப்புக்களும், தேவைப்பாடும் அதிகரித்து வருகின்றது. அதன் ஒரு பரிமாணமானது ஆசிய பசுபிக் நாடுகளில் பொருளாதார ஒத்துழைப்பும் சீனாவின் தலைமையில் உருவாகி இருக்கிறது. இது சீனாவுடனான வர்த்தக உறவும் அதன் முக்கியத்துவமும் உணரப்பட்டது போல் பிராந்திய உற்பத்தியின் பரிமாற்றமும் இலகுவானதும் சுமூகமானதுமான சூழலை உருவாக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது சீனாவின் அரசியல் பலத்தை அதிகரித்துள்ளது என்ற வாதம் ஏற்றுக் கொள்ளப்படும் அளவுக்கு அதன் பொருளாதாரப் பலமும் பிராந்தியப் பொருளாதாரப் பலமும் அதிகரிக்க வாய்ப்பு எற்பட்டுள்ளது. கொவிட் 19 ஒரு பொருளாதாரத் தேக்கத்தை நாடுகளுக்கு இடையில் இனங்காண வைத்துள்ளது. அதிலும் பிராந்தியங்கள் முதல் நெருக்கடி மையங்களாக மாறியுள்ளன. அவற்றின் உற்பத்திப் பரிமாணங்கள் அத்தகைய நெருக்கடியில் அகப்பட்டு;ளளன. அதிலிருந்து பிராந்திய பொருளாதா விரிவாக ஒத்துழைப்பு இலகுவான நடைமுறையாக ஆசிய-பசுபிக் பிராந்தியத்தை மாற்றுகிறது என்பது 15 நாடுகளாலும் உணரப்படுகின்றது.

இரண்டாவது இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிற்பாடு பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு (TPP)என்ற அமைப்பிலிருந்து 2017 அமெரிக்கா விலகியதை அடுத்து அத்தகைய பொருளாதார ஒத்துழைப்பு முடிபுக்கு வந்தது. இதனை அடுத்து ட்ரம்பின் தலைமையில் இந்தோ -பசுபிக் தந்திரோபாயக் கூட்டொன்று ஏற்படுத்தப்பட்டது. அதன் வளர்ச்சியாக குவாட் என்ற அமைப்பு அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்வாங்கி உருவாக்கப்பட்டது. அது இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் 'ஒரே சுற்று ஒரே பாதை" எனும் சீன விரிவாக்கத்தைத் தடுப்பதாக அமைந்திருந்தது. இச் சூழலில் மேற்குறித்த 15 நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பானது அமெரிக்க இந்தியக் கூட்டின் இந்தோ பசுபிக் தந்திரோபாயத்தையும் குவாட் அமைப்பின் பாதுகாப்பு நகர்வுகளையும் தகர்க்க ஆரும்பித்துள்ளது. குறிப்பாக ஜப்பான், அவுஸ்ரேலியா இரண்டு நாடுகளும் சீனா தலைமையிலான வர்த்தக பொருளாதார ஒழுங்கமைப்பில் இணைந்தமை அமெரிக்க, இந்திய அணிக்குப் பெரும் சவாலாக மாறியது. தற்போது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் பலம் அதிகரித்து வருகின்றது.

மூன்றாவது உலகளாவிய ரீதியில் மிக நீண்ட காலமாக நிலைத்திருக்கும் பொருளாதார ஒத்துழைப்பு அமையமான ஆசியான் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பில் இணைந்திருப்பது சீனாவின் பலத்தை இப் பிராந்தியத்தில் அதிகரிக்க வைத்துள்ளது. குறிப்பாக நப்டாவின் (NAFTA) தோல்வியும், சார்க் அமைப்பின் (SAARC)தொழிற்படு திறனின்மையும்இ ஐரோப்பிய யூனியனின் (EU-Brixt) உடைவும் ஆசியான் (ASEAN) அமைப்பிற்கான தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்றது. ஒரு வகையில் குறிப்பிடுவதானால் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் வெற்றிகரமான பொருளாதார ஒத்துழைப்பு அமையமாக ஆசியான் விளங்குகின்றது. இது ஆசிய பசுபிக் நாடுகளுக்கு பலமான வர்த்தகக் கூட்டாகவே அமைந்துள்ளது.

எனவே பிராந்தியப் பொருளாதார ஒது;துழைப்பு கொவிட் 19க்குப் பின்னான பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்ட அம்சமாகும். அதற்கான இலக்கும் செயல்பாடும் வெற்றிகரமானதாக அமைவதற்கு புவிசார் அரசியல் பொறிமுறை பாரிய ஒத்துழைப்பை ஏற்படுத்தக் கூடியது. உற்பத்தியும் பரிமாற்றமும் பிராந்தியங்களுக்குள் பரிமாற்றப்படுகின்ற போது அது ஒரு பலமான அரசியல் பொருளாதார இருப்பை ஏற்படுத்தக் கூடியது. சீன அமெரிக்கப் போட்டியானது வெளிப்படையானதாக விளங்குகின்ற போது ஏற்படுகின்ற வாய்ப்புக்களை சீனா தனதாக்குகின்றது. இது அமெரிக்க செல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியை நோக்கி நகர வழிவகுக்குமொன கணிக்கப்படுகிறது. அமெரிக்க ஆட்சி மாற்றமும் பைடன் -ட்ரம் மோதலும் வெள்ளை மாளிகை ஆட்சி மாற்றத்துக்கான நெருக்கடியும் சீனாவுக்கான வாய்ப்புக்களை அதிகர்த்துள்ளது. சரியான கால நேரத்தை கணித்து அமெரிக்கா நெருக்கடிக்குள் திணறிக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் சீனா ஒரு பாரிய பாய்ச்சலை சாத்தியப்படுத்தி இருக்கின்றது. அது மட்டுமன்ன்றி அமெரிக்க கூட்டின் வலுவான சக்திகளைத் தகர்தெடுத்ததோடு அந் நாடுகளின் அடிப்படைப் பொருளாதாரத் தேவைகளை சீனா சரியாகப் பயன்படுத்தி உள்ளது. அமெரிக்க இந்தியக் கூட்டு இராணுவ ரீதியிலும் கடல் பயிற்சிகளிலும்; ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் மையப்படுத்தி அதற்கான முனைப்புகளை சீனா பாதுகாக்க ஆரம்பித்திருக்கின்றது. எனவே சீனாவின் உலகத்தை ஆளும் திறன் என்பது இன்னொரு வலுவான கட்டத்தை நேர்க்கி அடியெடுத்து வைத்துள்ளது. சீனாவின் பலம் என்பது ஆசியானின் பலமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

சீனாவின் எழுச்சியானது இலங்கையில் புவிசார் பூகோள சவாலை எதிர் கொள்வதற்கான வாய்ப்பாகவே அமைந்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமெரிக்க இந்திய நெருக்குவாரங்களால் சீன சார்பு நிலைக்குள் பயணிக்க முடியாத சூழல் கடந்த ஒரு வருடமாக நீடித்தது. ஆனால் தற்போது அமெரிக்க நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றமும் சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழபை;புக்கான உடன்படிக்கையும் அத்தகைய நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கான வாய்ப்பினைத் தந்துள்ளது. பிராந்திய பொருளாதார விரிவாக்க உபாயம் என்பது அமெரிக்கா இந்தியக் கூட்டுக்கு நெருக்கடியையும் சீனா தலைமையிலான அரசுகளுக்கான வாய்ப்பையுமே உருவாக்கியுள்ளது. இத்தகைய உலக ஒழுங்கு இலங்கை ஆட்சியாளர்களின் நலன்களுக்கான உத்தரவாதத்தை அதிகரித்துள்ளது.

அருவி இணையத்திற்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE