Wednesday 24th of April 2024 09:05:55 AM GMT

LANGUAGE - TAMIL
.
எல்.பி.எல்-2020: சுப்பர் ஓவரில் கண்டி டஸ்கர்ஸை வீழ்த்தி கொழும்பு கிங்ஸ் வெற்றி!

எல்.பி.எல்-2020: சுப்பர் ஓவரில் கண்டி டஸ்கர்ஸை வீழ்த்தி கொழும்பு கிங்ஸ் வெற்றி!


லங்கா பிரிமியர் லீக் ரீ-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியை சுப்பர் ஓவரில் வீழ்த்தி கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

ம்பாந்தோட்டைஇ மஹிந்த ராஜபக்‌ச மைதானளத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கிங்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை குவித்தது.

கணடி டஸ்கர்ஸ் அணியின் சார்பில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய இருவரும் அரைச் சதமடித்து அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர வழிவகுத்திருந்தனர்.

ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 22 பந்துகளில் 53 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் குசல் பெரேரா 52 பந்துகளில் 87 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

இவர்கள் தவிர குசல் மெண்டிஸ் 30 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் அசேல குணவர்தன 20 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காது இருந்தார்.

பந்து வீச்சில் கைஸ் அஹமட், மன்ப்ரீத் கோனி, துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

220 என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்று போட்டியை சமன் செய்தது.

அணித் தலைவர் தினேஸ் சந்திமல் 46 பந்துகளை எதிர்கொண்டு 80 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று ஆட்டமிழந்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் அன்ட்ரு ரஸல் 13 பந்துகளில் 24 ஓட்டங்களையும், மத்தியூஸ் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றியிருந்தனர்.

பின்வரிசையில் களமிங்கிய இசுறு உதான 12 பந்துகளை எதிர்கொண்டு நான்கு 6 ஓட்டங்களை விளாசி 34 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது இருந்ததுடன் போட்டியை சமநிலைக்கு கொண்டுவர உதவியிருந்தார்.

பந்துவீச்சில் நுவான் பிரதீப், நவீன் உல் ஹக் ஆகியோர் தலா இரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

இதையடுதது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி ஒரு விக்கெட் இழந்து 16 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 10 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது.

இதனால் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக தினேஸ் சந்திமல் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE