Friday 29th of March 2024 02:43:12 AM GMT

LANGUAGE - TAMIL
.
பலஸ்தீனம் என்ற இறையாண்மை நாடு உருவாக வேண்டும்! - பிரதமர் மகிந்த!

பலஸ்தீனம் என்ற இறையாண்மை நாடு உருவாக வேண்டும்! - பிரதமர் மகிந்த!


பலஸ்தீனம் என்ற இறையாண்மை கொண்ட நாடு எதிர்காலத்தில் உலக வரைப்படத்தில் சேர்க்கப்பட வேண்டும் என பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பலஸ்தீனத்தின் நட்புணர்வு கொண்ட மக்களுக்கும் ஒத்துழைப்பை வழங்குவதில் நாம் உறுதியுடன் செயற்படுவோம். எனவும் கூறியுள்ளார்.

பலஸ்தீன மக்களுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பான சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

1948ஆம் ஆண்டு இஸ்ரேல் தேசத்தை உருவாக்கும்போது, நக்பா மற்றும் பலஸ்தீனர்கள் தங்களது இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்டனர். அதன்போது இடம்பெற்ற நகரம் மற்றும் கிராமத்தை அழிக்கும் பேரழிவின் எதிரொலியாக 1978ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான சர்வதேச தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட 32/40B என்ற பரிந்துரையின் கீழ் சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினமாக நவம்பர் 29ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டது.அன்று பலஸ்தீனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகள் குறியீட்டு ரீதியில் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியது.

1947ஆம் ஆண்டு பலஸ்தீனத்தில் வேறான அரேபிய மற்றும் யூத அரசை நிர்மாணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை 181 (11) இலக்க பரிந்துரையை நிறைவேற்றியது. அப்பரிந்துரையின் ஊடாக பலஸ்தீனம் யூத மற்றும் அரேபியா என இரு பிரிவுகளாக பிரிந்து 73 ஆண்டுகளுக்கு பின்னர் இம்முறை 43ஆவது தடவையாகக் அதனை கொண்டாடுகிறது.

பலஸ்தீனியர்கள் இன்னும் இராணுவ ஆட்சிக்கு உட்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் சிவில் நிர்வாகம், வன்முறை, குண்டுவெடிப்பு மற்றும் இஸ்ரேலிய குடியேற்றங்களின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றின் விளைவாக அவர்களின் மனிதாபிமான மற்றும் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்துள்ளன. இது தவிர சுதந்திர பலஸ்தீனத்திற்காக தமது வாழ்நாளை தியாகம் செய்தவர்கள் அதிகமாகும்.

2015ஆம் ஆண்டாகும்போது பலஸ்தீன அகதிகளின் எண்ணிக்கை 5.6 மில்லியன் ஆகும். தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும். மொத்த பலஸ்தீன மக்கள் தொகையில் அரைவாசி பேர் அகதிகளாக தங்களது இடங்களிலிருந்து வெளியேறி வாழ்ந்து வருகின்றனர்.

பலஸ்தீனம் தொடர்பான பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபை வரலாற்றுடன் இணைந்ததாக விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ள நீண்டகாலமாக தீர்க்கப்படாத நெருக்கடிகளில் இதுவும் ஒன்றாகும்.

பலஸ்தீனம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்டதுடன், 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் முன்னால் பலஸ்தீன கொடியை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பலஸ்தீன மக்களுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பான சர்வதேச தினமானது, பிரச்சினைகளை குறைப்பதனையும், பலஸ்தீன மக்களுக்கு துன்பகரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு தீர்மானத்தை நியாயப்படுத்தும் முயற்சியாகவும் பரவலாக கருதப்படுகிறது.

பலஸ்தீன விடுதலை அமைப்பு எனும் பெயரில் பலஸ்தீனத்தை காப்பாற்றும் அமைப்பொன்றை முதல் முறையாக இலங்கைக்குள் நிறுவும்போது அதன் தலைமை பொறுப்பை எனக்கு வழங்குவதன் மூலம், பலஸ்தீனத்திற்காக மேற்கொண்ட தலையீட்டை பாராட்டி பலஸ்தீனத்தின் உயரிய விருதான பலஸ்தீன நட்சத்திரம் விருது எனக்கு வழங்கப்பட்டமையை இன்று நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

இலங்கை மற்றும் பலஸ்தீன அரசாங்கத்திற்கு இடையிலான உறவு சிறப்பானதாகும். பலஸ்தீன அரசாங்கத்திற்கும், பலஸ்தீனத்தின் நட்புணர்வு கொண்ட மக்களுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குவதில் நாம் உறுதியுடன் செயற்படுவோம்.

பலஸ்தீனம் என்ற இறையாண்மை கொண்ட நாடு எதிர்காலத்தில் உலக வரைப்படத்தில் சேர்க்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE