எல்.பி.எல். ரி-20 போட்டித் தொடரில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியில் வடக்கு கிழக்கைச் சோ்ந்த இளம் வீரர்கள் நால்வர் இடம்பெற்றுள்ளமை நல்ல வாய்ப்பாகவும் சிறந்த அனுபவமாகவும் இருக்கும் என இலங்கை சர்வதேச சிறிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிறிக்கெட் பயிற்சியாளருமான ரசல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
வட, கிழக்கைச் சோ்ந்த 4 வீரர்களுடனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ருவிட்டரில் பதிவிட்டு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியில் யாழ்.பரியோவான் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரியின் வீரர்களான வி.வியஸ்காந்த், தி.டினோஷன் க.கபில்ராஜ் மற்றும் செ.விஜயராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிகளுக்கு இடையே நேற்றிவு இடம்பெற்ற போட்டியில் இவா்களில் எவரும் களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்