Friday 19th of April 2024 02:22:14 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.பரிசோதனைக்கூடம்; மன்னாரில் நால்வர், கண்டாவளையில் ஒருவருக்கு தொற்றுறுதி! (2ஆம் இணைப்பு)

யாழ்.பரிசோதனைக்கூடம்; மன்னாரில் நால்வர், கண்டாவளையில் ஒருவருக்கு தொற்றுறுதி! (2ஆம் இணைப்பு)


இரண்டாம் இணைப்பு

யாழ். போதனா வைத்தியசாலை பரிசோதனைக்கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைக் கூட முடிவுகளின் அடிப்படையில் ஐவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

29.11. .2020.

9.00 pm.

* இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 186 பேருக்கு Covid-19 பரிசோதனைகள் செய்யப்பட்டது.

வட மாகாணத்துக்கு வெளியில் இருந்து தொழில் நிமித்தம் இப்பகுதிகளுக்கு வந்தவர்களில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி வீதி திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரோடு சாரதியாக கடமையாற்றியவர் தனிமைப்படுத்தளில் இருந்த நிலையில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தென்பகுதியில் இருந்து வீதி திருத்த வேலைக்காக வந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்றைய பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் பகுதியிலிருந்து தொழில் நிமிர்த்தம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு வந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் 3 பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்..

முதலாம் இணைப்பு யாழ். போதனா வைத்தியசாலை பரிசோதனைக்கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைக் கூட முடிவுகளின் அடிப்படையில் ஐவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிலாபத்திலிருந்து வந்தமையால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவர் மற்றும் வீதிப்புனரமைப்பில் ஈடுபட்டிருந்தவர்களிடம் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவர் என மன்னாரைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றைய நபர் கண்டாவளை பிரதேசத்தினைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில்


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE