மகர சிறைச்சாலையில் நேற்று பி.பகல் வேளையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை வன்முறையாக மாறியதில் ஏற்பட்ட உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது.
மகர சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடையே ஏற்பட்ட அமைதியின்மை வன்முறையாக மாறி தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்குள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
தொடரடந்தும் வன்முறை கட்டுக்கடங்காத நிலையில் கைதிகள் சிறையில் இருந்து தப்பிக்க முற்பட்ட நிலையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது நேற்று இரவு வரை 4 பேர் உயிரிழந்தும் 24 பேர் காயமடைந்தும் இருந்ததாகவும் தெரிவக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அதிகாலை நலவரத்தின் அடிப்படையில் சிறைச்சாலை வன்முறையில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்றைய தினம் மகர சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 183 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை