தமிர்களால் பாரம்பரியமாக வழிவழியாக பின்பற்றப்பட்டு வரும் புனிதமான கார்த்திகை தீபங்களை வீசியெறிந்தமை இராணுவத்தினரின் உச்சபட்ட அடக்குமுறையாகும் என தமிழரசுக் கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தமிழர்கள் கார்த்திகை தீப திருநாளை அனுட்டித்தபோது இராணுவத்தினர் பல இடங்களிலும் சமய அனுட்டானங்களை செய்யவிடாது தடுத்தமைக்கு எதிராகவே கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவ ;அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"கார்த்திகை தீபம் ஏற்றிய இந்துக்களை அச்சுறுத்தி தீபங்களை வீசியெறிந்த இராணுவத்தினரின் செயல் உச்சபட்ச அடக்குமுறை” இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு, இலங்கையில் சமய, கலாசார நிகழ்வுகளை சிறுபாண்மையினர் அச்சமின்றி கடைப்பிடிக்கும் சூழல் ஏற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் உள்ள முருகன் ஆலயங்களில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு சொர்க்கப்பாணை கொழுத்துவதற்கும் இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும் தடை விதித்தும், எச்சரித்தும் இருந்ததுடன் வீடுகளில் ஏற்றப்பட்ட தீபங்களை தூக்கியெறிந்தும் அநாகரிக செயலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்