Saturday 20th of April 2024 06:16:08 AM GMT

LANGUAGE - TAMIL
.
சந்திரனில் தரையிறங்கியது சீனாவின் Chang'e-5 விண்கலம்!

சந்திரனில் தரையிறங்கியது சீனாவின் Chang'e-5 விண்கலம்!


சந்திரனை ஆய்வு செய்யும் நோக்கில் அங்கிருந்து மணல் உள்ளிட்ட மாதிரிகைள எடுத்துவர சீனாவால் அனுப்பப்பட்ட சாங் இ -5 (Chang'e-5 ) விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை சந்திர மேற்பரப்பில் தரையிறங்கியது.

விண்கலம் சந்திர மேற்பரப்பில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடத்தை விண்கலம் அடைந்துள்ளது என சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் சாங் இ -5 விண்கலம் கடந்த 24-ஆம் திகதி சீனாவின் மிக சக்திவாய்ந்த ரொக்கட்டான லோங் மார்ச் -5 (Long March 5) வழியாக ஏவப்பட்டது. சந்திர மேற்பரப்பில் இருந்து பூமிக்கு மண் மாதிரிகளை கொண்டுவருவதே சீனாவின் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் ஏறக்குறைய 4 தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு நாடு சந்திரனின் மேற்பரப்பை அகழ்வாராய்ச்சி செய்து பாறை மற்றும் மண்ணை அங்கிருந்து பூமிக்கு கொண்டு வருவரும் சந்தர்ப்பமாக இது அமையும்.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE