புரேவி சூறாவளியின் நகர்வு இலங்கை கரையை நெருங்கிவரும் நிலையில் யாழ். வடமராட்சி பகுதியில் பலத்த காற்று வீசி வருவதுடன், கடுமையான மழையும் பெய்து வருகிறது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புரேவி சூறாவளியானது தற்போது முல்லைத்தீவுக்கு தென்கிழக்கே நிலைகொண்டு நகர்ந்து வருகிறது.
இன்று பி.பகல் அல்லது இரவு வேளையில் முல்லைத்தீவை அண்மித்து ஊடறுத்து கரையைக் கடக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் அதன் தாக்கம் வடமராட்சி பகுதியில் தீவிரமாக உணரக்கூடியதாக உள்ளதாக அங்கிருந்து எமது செய்தியாளர் அருவி இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.
வடமராட்சி பிரதேசத்தின் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, உடுப்பிட்டி, நெல்லியடி உள்ளிட்ட பகுதிகளில் இடைவிட்டு பலத்த சூறைக்காற்று வீசிவருவதாகவும் கடுமையான மழைப் பொழிவு இருந்து வருவதுடன் கடல் பகுதி மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வடமராட்சி, வல்வெட்டித்துறை