Thursday 18th of April 2024 02:31:31 PM GMT

LANGUAGE - TAMIL
.
கிளிநொச்சி: இரணைமடு உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!

கிளிநொச்சி: இரணைமடு உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!


புரேவி புயல் காரணமாக பெய்த மழையை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

இன்று (டிச-04) காலை 6 மணி வாசிப்பின்படி குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கு அமைவாக மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

36' வான் உயரம் கொண்ட இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 25'09" ஆக உயர்ந்துள்ளது.

26' அடி வான் உயரம் கொண்ட கல்மடு குளம் 22' - 03" அடியாகவும், 12' அடி வான் உயரம் கொண்ட பிரமந்தனாறு குளம் 08' - 03" அடியாகவும், 10' 06" அடி வான் உயரம் கொண்ட கனகாம்பிகைக்குளம் 10' 04" அடியாகவும் உயர்ந்துள்ளது.

இதேவேளை 25' அடி வான் உயரம் கொண்ட அக்கராயன்குளம் 19' 10" ஆகவும், 10'' அடி வான் உயரம் கொண்ட கரியாலை நாகபடுவான் குளம் 07’-03" அடியாகவும், 19' அடி வான் உயரம் கொண்ட புதுமுறிப்பு குளம்15’-07" அடியாகவும் உயர்ந்துள்ளது.

மேலும் 8' அடி வான் உயரம் கொண்ட குடமுருட்டிகுளம் 08'-04" உயர்ந்து 04" வான் பாய்வதாகவும், 09' 06" அடி வான் உயரம் கொண்ட வன்னேரிக்குளம் 09'-08"அயாக உயர்ந்து 2" வான் பாய்வதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

தொடர்ந்தும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE