Thursday 21st of January 2021 11:03:21 AM GMT

LANGUAGE - TAMIL
.
கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனாத் தொற்றுறுதி!


கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனாத் தொற்றுறுதியாகியுள்ளதாக வடமாகாண சுகாதாரசேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இடம்பெற்ற மரண நிகழ்வு ஒன்றிற்காக கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில் இருந்து வருகைதந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 55 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவருக்கே நேற்றைய தினம் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த மரண நிகழ்வுக்கு வருகைதந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த பெண்ணின் கணவருக்கே நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த நபரின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பின்னிரவு அதன் முடிவு வெளியாகியிருந்தது.

அதன் அடிப்படையில் அவருக்கு கொரோனாத் தொற்றுறுதியாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறியக்கிடைத்தது.

இந்நிலையில் குறித்த தொற்று குறித்து வடமாகாண சுகாதாரசேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கொழும்பு, கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE