Wednesday 24th of April 2024 11:13:59 AM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியா: நீர்த்தேக்கத்தில் மாயமான பாடசாலை மாணவனை தேடுதல் பணி தீவிரம்!

வவுனியா: நீர்த்தேக்கத்தில் மாயமான பாடசாலை மாணவனை தேடுதல் பணி தீவிரம்!


வவுனியாவில் நீர்த்தேக்கத்தை பார்வையிடச் சென்ற போது நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து காணாமல் போயிருந்த பாடசாலை மாணவனைத் தேடும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் தீவரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மாயமாகியிருந்தார்.

அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா பேராறு நீர்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி வருகின்றது. இதனை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமுள்ளனர்.

இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக தி.தனுசன் எனும் பதினெட்டு வயது மதிக்க தக்க இளைஞர் தனது நண்பர்களுடன் நேற்றைய தினம் மதியம் அங்கு சென்றுள்ளார். இதன்போது நீர் வழிந்தோடும் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீருனுள் இறங்கி இளைஞரை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன், பொலிசார் மற்றும் கிராம மக்களால் இளைஞரை தேடும் பணி இரவிரவாக முன்னெடுக்கப்பட்டிருந்தும் தேடுதல் பணி தோல்வியுற்றிருந்தது.

இந்நிலையில் காணாமல் போன இளைஞனை இன்றும் எட்டு மணி தாெடக்கம் இரண்டாவது நாளாக கடற்படையினர், பொலிஸார், இராணுவம், மற்றும் கிராமத்து இளைஞர்கள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணாமல் போன இளைஞனை இதுவரை கண்டுபிடிக்கவில்லை ஆகவே தொடர்ந்தும் தீவிரமாக தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE