அண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கதாநாயகனாக நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பித்து நடைபெற்று வந்த நிலையில் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த டிசம்பர்-14ம் திகதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது.
ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அண்ணாத்த படக்குழுவில் எட்டுப் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஐதராபாத்தில் தங்கியுள்ள இடத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு