பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
இசை உலகில் இந்திய எல்லை கடந்து உலக அளவில் பிரசித்தி பெற்ற ஏ.ஆர். ரகுமானின் தந்தை சிறுவயதில் உயிரிழந்த நிலையில் தாயின் அரவணைப்பிலேயே இவ் உயரத்தை எட்டியிருந்தார்.
தனது இசைப் பயணத்தில் உறுதுனையாக இருந்த தனது தாயின் வகிபாகம் குறித்து பல் வேறு நேர்காணல்களில் இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தே வந்திருந்தார்.
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று (டிச-28) காலமானார்.
இவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ஏ.ஆர். ரகுமான் ரசிகர்கள் என பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.