Tuesday 23rd of April 2024 07:49:40 PM GMT

LANGUAGE - TAMIL
.
அருவியாற்றில் காணாமல் போயிருந்த கிராம சேவகர் சடலமாக மீட்பு!

அருவியாற்றில் காணாமல் போயிருந்த கிராம சேவகர் சடலமாக மீட்பு!


மன்னார் நானாட்டான் அருவியாற்றில் நண்பர்களுடன் குளித்த போது சுழலில் சிக்கி காணாமல் போயிருந்த கிராம சேவகரை கடந்த இரு நாட்களாக தேடிவந்த நிலையில் அவரது சடலம் இன்று (டிச-31) காலை அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

காணாமல் போய் தற்போது சடலமாக மீட்கப்பட்ட கிராம அலுவலகர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி கிராம அலுவலகர் பிரிவில் கிராம அலுவலகராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என தெரிய வந்துள்ளது.

நான்கு கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் அருவியாற்றில் குளிக்கும் போது இவ் அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

இதன் போது கிராம அலுவலகர்கள் ஆற்றில் குளித்த போது ஒரு கிராம அலுவலகர் காணாமல் போனதோடு, ஏனைய கிராம அலுவலகர்கள் மீட்கப்பட்டனர்.

காணாமல் போன கிராம சேவையாளர் நானாட்டான் கட்டைக்காட்டு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளதோடு அவரை தேடும் பணி 2 ஆவது நாளாக நேற்று புதன் கிழமை மாலை வரை தேடியுள்ளனர்.

கடற்டை மற்றும் வங்காலை, அரிப்பு கிராம மீனவர்களும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டிருந்த போதிலும் மீட்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை அரிப்பில் இருந்து கடல் தொழில் நடவடிக்கைக்காக சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தை கண்டு அரிப்பு ஆலய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியதியிருந்தனர்.

இதையடுத்தே அருவி ஆற்றில் காணாமல் போன கிராம அலுவலரது சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE