அண்ணாத்த படப்பிடிப்பு குழுவில் சிலருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்படடிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாகவும், தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெறத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இவ்வாறு தனிமைப்படுத்தப்படட்டிருந்த ரஜினிகாந்த்திற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் கூட ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காணப்பட்டது. ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகரித்ததால் அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டார். ரஜினி தொடர்ந்து 10 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் சூழலுக்கு அவர் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ரஜினிகாந்த் ஏற்கனவே அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டிருந்த நிலையில் சாதாரணமாகவே நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
இதனால் கொரோனா தொற்று தாக்கும் அபாயம் மிக அதிகம். எனவே தான் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் முடிவில் இருந்து பின்வாங்கினார்.
பலதடவைகள் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதும், பின் ஏதோ ஒரு காரணத்தை முன்னிறுத்தி பின்வாங்குவதும் வழமையாக இருதுந்து வந்துள்ளது. தற்போதும் திடீர் உடலநலக் குறைவை முன்வைத்து அரசியல் பிரவேச முடிவை கைவிட்டுள்ள்ளார் ரஜினி.
ரஜினியின் இந்த முடிவு குறித்து பல்வேறு தரப்பில் இருந்து பல கருத்துகள் வெளிவருவது ஒருப்பமிருக்க, பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரஜினி ரசிகர் மன்றத்தினர் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ரஜினியின் அரசியல் முடிவுக்கு ரசிகர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ரஜினியின் ஆதரவாளர்கள் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது வீட்டின் முன்பு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமூகவலைதளங்களிலும் பல்வேறு எதிர்ப்பு பதிவுகள் எழுந்துள்ளன. இதனால் ரஜினி கடந்த சில நாட்களாக மனச்சோர்வு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உடல்நல பாதிப்பு உள்ள நிலையில் மேலும் மனச்சோர்வு ஏற்படுவதால் சிகிச்சை பெற அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல் பரிசோதனை செய்து கொண்டு, அங்கேயே சில நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் சில நாட்கள் இல்லாமல் வேறு இடத்தில் தங்கி இருந்தால் ரஜினியின் மனநிலையில் மாறுதல்கள் ஏற்படலாம் என்று குடும்பத்தினர் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக மேலும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு