Thursday 18th of April 2024 09:48:42 AM GMT

LANGUAGE - TAMIL
-
கனடாவின் சனத்தொகை வளர்ச்சி வீதம்  2020- மூன்றாம் காலாண்டில் மோசமான வீழ்ச்சி!

கனடாவின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 2020- மூன்றாம் காலாண்டில் மோசமான வீழ்ச்சி!


கனடாவின் சனத் தொகை வளர்ச்சி விகிதம் 2020 ஆம் ஆண்டின் ஜூலை 1 முதல் 2020 செப்டம்பர் 30 வரையான மூன்றாம் காலாண்டில் மிகக் குறைந்தளவில் பதிவாகியுள்ளது.

2020 மூன்றாவது காலாண்டில் நாட்டில் சனத்தொகைப் பெருக்கம் வெறும் 2,767 பேர் என்ற அளவிலேயே அதிகரித்துள்ளது.

1946 ஆம் ஆண்டின் பின்னர் பதிவான மிகக் குறைந்த சனத்தொகை வளர்ச்சி வீதம் இதுவாகும் என கனடா புள்ளிவிவர துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சனத்தொகை வளர்ச்சி வீதத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் மிக முக்கிய காரணியான குடியேற்றவாசிகளின் வரவு குறைந்தமை அமைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை குடியேற்றவாசிகள் மூலம் 70 ஆயிரத்தால் அதிகரித்தது.

கனடாவின் பயணக் கட்டுப்பாடுகள் மார்ச் 2020 வரை நடைமுறைக்கு வரவில்லை என்பதே இதற்குக் காரணமாகும்.

கனடாவின் மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைப்பதில் தொற்று நோயின் பின்னரான பயணக் கட்டுப்பாடுகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

2020 இரண்டாவது காலாண்டில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்த நிலையில் குடியேற்றவாசிகள் மூலமான சனத்தொகை வளர்ச்சி 10 ஆயிரத்துக்கும் குறைவாகவே காணப்பட்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய கனடா குடியேற்றவாசிகளையே பெரிதும் நம்பியுள்ளது.

எனினும் தொற்று நோயின் பின்னர் குடியேற்றத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் நாட்டில் பெரும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தொற்று நோய்க்கு மத்தியில் கடனாவின் நியூஃபவுண்ட்லாண்ட் , லாப்ரடோர், நோவா ஸ்கோடியா, நியூ பிரன்சுவிக், ஒன்ராறியோ, சஸ்காட்செவன், பிரிட்டிஷ் கொலம்பியா, வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் நுனாவுட் ஆகிய எட்டு மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களின் மக்கள் தொகை குறைந்துள்ளது.

பிரின்ஸ் எட்வர்ட் தீவு, கியூபெக், மனிடோபா, அல்பர்ட்டா மற்றும் யூகோன் ஆகிய ஐந்து மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் மக்கள் தொகை வீதம் சற்று அதிகரித்ததுள்ளது எனவும் கனடா புள்ளிவிபரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE