Saturday 16th of January 2021 11:46:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஒன்ராறியோவில் 200,000 -ஐ நெருங்கும்  கொரொனா தொற்று நோயாளர் தொகை!

ஒன்ராறியோவில் 200,000 -ஐ நெருங்கும் கொரொனா தொற்று நோயாளர் தொகை!


ஒன்ராறியோவில் நேற்று மேலும் 3,270 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், 29 கொரோனா மரணங்களும் பதிவாகின. நேற்று இறந்தவர்களில் 14 பேர் முதியோர் பராமரிப்பு மையங்களைச் சோ்ந்தவர்களாவா்.

புதிய தொற்று நோயாளர்களுடன் மாகாணத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 194,232- ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் மொத்த கொரோனா மரணங்கள் 4,679 ஆக உயர்ந்துள்ளன.

இதேவேளை, மாகாணத்தில் தொற்று நோயின் தீவிரத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 1,200-ஐ கடந்துள்ளது.

மாகாணத்தில் கடந்த 7 நாட்களில் சராசரியாக நாளொன்றுக்கு 2,982 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த வாரத்தில் 2,186 ஆக இருந்தது.

நேற்று மொத்தம் 39,000 கொரோனா தொற்று சோதனைகள் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சோதனையில் நேர்மறை வீதம் 9.7 ஆகப் பதிவானது. இது மாகாணத்தில் பதிவான இரண்டாவது அதிக நேர்மறை வீதமாகும்.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட புதிய தொற்று நோயாளர்களில் 917 பேர் ரொரண்டோவைச் சோ்ந்தவர்களாவர். பீல் பிராந்தியத்தில் -581, யோர்க் பிராந்தியத்தில் - 389, விண்ட்சர்-எசெக்ஸ் - 246, ஒட்டாவாவில் - 131 தொற்று நோயாளர்கள் நேற்று உறுதி செய்யப்பட்டனர்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE