Thursday 18th of April 2024 12:36:41 PM GMT

LANGUAGE - TAMIL
-
பைசர் கொரோனா தடுப்பூசி பெற்ற  பெண் இரண்டு நாட்களில் மரணம்!

பைசர் கொரோனா தடுப்பூசி பெற்ற பெண் இரண்டு நாட்களில் மரணம்!


பைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்று இரண்டு நாட்களின் பின் போர்த்துகீசிய சுகாதார பணியாளர் ஒருவர் உயிரிழந்த தகவல் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

41 வயதான சோனியா அசெவெடோ புத்தாண்டு தினத்தன்று வீட்டில் திடீரென உயிரிழந்தார். அவரது பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னரே அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும்.

போர்டோவில் உள்ள போர்த்துகீசிய மருத்துவமனையில் குழந்தை மருத்துவ பிரிவில் பணிபுரிந்த இரண்டு பிள்ளைகளின் தாயான இப்பெண். கடந்த டிசம்பர் 30-ஆம் திகதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன்பின்னர் எந்தவிதமான பாதகமான பக்க விளைவுகளையும் சந்தித்ததாகக் கூறவில்லை.

அவள் நன்றாக இருந்தாள். அவளுக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை. கோவிட்19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் எந்த பாதகமான அறிகுறிகளும் ஏற்படவில்லை. திடீரென ஏன் இறந்தாள்? எனத் தெரியவில்லை. அதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன் என அசெவெடோவின் தந்தை அபிலியோ அசெவெடோ போர்த்துகீசிய நாளேடான கொரியோ டா மன்ஹாவிடம் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று காலை நாங்கள் ஒன்றாக இருந்து சாப்பிட்டோம். சிறிது நேரத்தில் முற்பகல் 11 மணியளவில் அபிலியோ இறந்து கிடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பில் போர்த்துக்கல் சுகாதார அமைச்சுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட போர்த்துக்கல் நாட்டில் இதுவரை 7,118 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. 427,000 -க்கும் அதிகமானவர்கள் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE