Saturday 16th of January 2021 11:20:34 AM GMT

LANGUAGE - TAMIL
.
2வது டெஸ்ட்டிலும் வெற்றி: இலங்கை அணியை வெள்ளை அடித்தது தென்னாபிரிக்கா!

2வது டெஸ்ட்டிலும் வெற்றி: இலங்கை அணியை வெள்ளை அடித்தது தென்னாபிரிக்கா!


2வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் சுற்றுலா இலங்கை அணியை வெள்ளையடித்து வெறுங்கையுடன் அனுப்புகிறது தென்னாபிரிக்க அணி.

தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளாகிய இன்று இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென்னாபிரிக்க அணி.

முதலாவது இனிங்சுக்காக இலங்கை அணி பெற்றுக் கொண்ட 157 ஓட்டங்களுக்கு பதிலளித்து ஆடிய தென்னாபிரிக்க அணி 302 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தது.

145 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி தடுமாற்றமான தொடக்கத்தை ஏற்படுத்தியது.

அணித் தலைவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான திமுத் கருணாரத்ன பொறுப்புடன் விளையாடி தனது 10வது சதத்தை நிறைவு செய்த நிலையில் 103 ஓட்டங்களுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கை 176 ஆக இருக்கும் போது 5வது விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார்.

நிரோசன் டிக்வெல 36 ஓட்டங்களையும், லகிரு திரிமன்னே 31 ஓட்டங்களையும், டீ சில்வா 16 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இறுதியில் 211 ஓட்டங்களை மட்டும் பெற்று ஆட்டமிழந்தது இலங்கை அணி.

பந்து வீச்சில் நிகிடி 4 விக்கெட்டுக்களையும், சிபம்லா 3விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதையடுத்து 67 ஓட்டங்களை மட்டும் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் 2வது இனிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2:0 என்ற அடிப்படையில் கைப்பற்றியதுடன் சுற்றுலா இலங்கை அணியை வெள்ளையடித்துள்ளது தென்னாபிரிக்க அணி.

ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருதுக்கு தென்னாபிரிக்க வீரர் டீன் எல்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE