Thursday 28th of March 2024 06:41:18 PM GMT

LANGUAGE - TAMIL
-
உலகப் பணக்காரர்கள் வரிசையில்  முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்!

உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்!


உலகப் பணக்காரர்கள் வரிசையில் அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.

செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, மின்சக்தியில் இயங்கும் அதிவேக இலத்திரனியல் கார்கள் தயாரிப்பது என பல்வேறு தொழிற்துறைகளில் எலான் மஸ்க் கொடிகட்டிப் பறந்து வருகிறார்.

கடந்த சில வாரங்களாக, உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருந்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து நேற்று 188.5 பில்லியன் டொலராக இருந்தது.

அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவின் சொத்து மதிப்பை விட இது 1.5 பில்லியன் டொலர் அதிகமாகும்.

இதனையடுத்து உலகப் பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE