பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் வீரருமான ஷோய்ப் மாலிக் சென்ற கார் பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் சற்று முன்னதாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஷோய்ப் மாலிக் சென்ற ஸ்போர்ட்ஸ் கார் அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியோரமாக உள்ள உணவக நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்-2021 இற்கான தேர்வு நடவடிக்கைகளில் பங்கேற்று வீடு திரும்பும் வழியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டிச் சென்ற மாலிக் உணவு விடுதிக்கு சென்ற போதே அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மாலிக் ஓட்டிச் சென்ற காரின் முன்பகுதி பலத்த சேதத்திற்கு உள்ளாகியிருந்த போதிலும் அதிஸ்டவசமாக மாலிக் காயமேதும் இன்றி தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: உலகம்