Tuesday 16th of April 2024 04:22:05 PM GMT

LANGUAGE - TAMIL
-
நினைவுத் தூபி இடிப்புக்கு எதிராக கனடாவில்  சுமார் 4,000 வாகனங்களுடன் மாபெரும் பேரணி!

நினைவுத் தூபி இடிப்புக்கு எதிராக கனடாவில் சுமார் 4,000 வாகனங்களுடன் மாபெரும் பேரணி!


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் போரில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டதைக் கண்டித்து கனடாவில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் வாகனப் பேரணி இடம்பெற்றது.

சுமார் 4,000 வரையான வாகனங்களுடன் போராட்டக்காரர்கள் இந்த எதிர்ப்பு வாகனப் பேரணியில் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளி பேணியவாறு கனேடியத் தமிழர்களால் இந்த வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

பிராம்ப்டன் சிட்டி ஹோலில் தொடங்கிய வாகனப் பேரணி அங்கிருந்து நகர்ந்து குயின்ஸ் பார்க்கில் உள்ள ரொரண்டோ சிற்றி ஹோலில் நிறைவடைந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும், தூபி இடிக்கப்பட்டதைக் கண்டித்தும் இந்த வாகனப் பேரணி இடம்பெற்றது.

கனடா எம்.பி. ஹரி ஆனந்தசங்கரி பிரம்டன் நகர மேயர் பட்ரிக் பிறவுண் உள்ளிட்ட கனேடிய அரசியல் வாதிகள் நினைவுத் தூபி இடிக்கப்பட்டதை எதிர்த்து உடனடியாகக் குரல் எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE