Saturday 20th of April 2024 05:35:18 AM GMT

LANGUAGE - TAMIL
-
மத்திய கிழக்கில் கனேடியப் படையினர்  தொடர்ந்தும் நிலை நிறுத்தப்படுவார்களா?!

மத்திய கிழக்கில் கனேடியப் படையினர் தொடர்ந்தும் நிலை நிறுத்தப்படுவார்களா?!


மத்திய கிழக்கில் நிலைகொண்டுள்ள கனேடியப் படையினர் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு பின்னரும் அங்கு தொடர்ந்து நிறுத்தப்படுவார்களா? அல்லது மீள அழைக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய கிழக்கில் கனேடியப் படைகளை நிலை நிறுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு மார்ச் 31-ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்தக் கேள்வி எழுந்துள்ளது.

மத்திய கிழக்கில் ஐ.எஸ். தீவிரவாத செயற்பாடுகளை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக 6 ஆண்டுகளுக்கு முன்னர் கனேடியப் படையினர் 500 பேர் அங்கு நிலைநிறுத்தப்பட்டனர். நேட்டோ படையணியில் இணைந்து கனேடியப் படையினர் அங்கு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது கனேடிய படையினரில் பெரும்பான்மையானவர்கள் குவைத் மற்றும் ஈராக்கில் நிலைகொண்டுள்ளனர்.

இந்நிலையில் கனேடியப் படையினரை மத்திய கிழக்கில் அமைதிச் செயற்பாட்டில் ஈடுபடுத்தும் வேலைத் திட்டத்துக்கான 1.39 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு மார்ச் 31 –ஆம் திகதியுடன் காலாவதியாகும் நிலையிலேயே அவர்களின் தொடர்ச்சியான இருப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது.

மத்திய கிழக்கில் கனேடியப் படைகள் தொடர்ந்து நிலைகொண்டிருக்குமா? என கனடியன் பிரஸ்ஸ் சமீபத்தில் எழுப்பிய கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் மறுத்துவிட்டார்.

எனினும் தனது நட்பு நாடுகளுடன் நம்பகமான பங்காளியாக கனடா தொடர்ந்து செயற்படும் என அவா் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் ஈராக் உள்ளிட்ட கனடாவின் நட்பு நாடுகள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்பதை நாங்கள் உறுதி செய்வோம். அதனைக் கருத்தில் கொண்டே அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவா் கூறினார்.

இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தற்போது பலவீனமடைந்துள்ளபோதும் அதன் மீள் எழுச்சிக்கான சந்தர்ப்பங்கள் இன்னும் உள்ளன என்பதில் சந்தேகமில்லை என ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பான நிபுணர் தோமஸ் ஜூனாவ் கூறினார்.

மத்திய கிழக்கில் ஈரானின் பலம் அதிகரித்துவரும் நிலையில் கனேடியப் படைகளை ஒட்டாவா மத்திய கிழக்கில் தொடர்ந்தும் நிலைநிறுத்தும் என நம்புவதாக வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பான நிபுணரான பெஸ்மா மோமானி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, ஈரானின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈராக்கில் தமக்குச் சார்பான அரசை வலுப்படுத்துவதே அமெரிக்காவின் கொள்ளையாக உள்ளது.

எனினும் அமெரிக்கா ஜனாதிபதிபதியாக எதிர்வரும் 20-ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் மத்திய கிழக்கு விவகாரங்களை எவ்வாறு அணுகும்? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எனினும் அமெரிக்கா எடுக்கவுள்ள எந்தவொரு முடியும் கனடாவின் தீா்மானத்தில் தாக்கம் செலுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்க துருப்புக்களை மீளப் பெறும் நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க புதிய ஜனாதிபதி இந்த விடயத்தில் எடுக்கப்போகும் முடிவுகளை அவதானித்தே கனடாவில் அடுத்தகட்ட நடவடிக்கைள் அமையும் எனவும் கருதப்படுகிறது.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE